தெற்கில் இருந்து வடக்கு வரை ஒவ்வொரு குரலும் பார்லி.,யில் ஒலிக்கட்டும்: ராகுல்
தெற்கில் இருந்து வடக்கு வரை ஒவ்வொரு குரலும் பார்லி.,யில் ஒலிக்கட்டும்: ராகுல்
தெற்கில் இருந்து வடக்கு வரை ஒவ்வொரு குரலும் பார்லி.,யில் ஒலிக்கட்டும்: ராகுல்
ADDED : ஜூன் 26, 2024 04:44 PM

புதுடில்லி: லோக்சபா எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் எம்.பி., ராகுலுக்கு, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். இதற்கு நன்றி தெரிவித்த ராகுல், ' தெற்கில் இருந்து வடக்கு வரை இந்தியாவின் ஒவ்வொரு குரலும் பார்லிமென்டில் ஒலிப்பதை உறுதி செய்வோம்' என்றார்.
டில்லியில் நேற்று (ஜூன் 25) நடைபெற்ற இண்டியா கூட்டணி கூட்டத்தில், லோக்சபா எதிர்க்கட்சி தலைவராக காங்கிரஸ் எம்.பி., ராகுல் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு காங்., தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தனர். ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், 'லோக்சபாவில் ராகுலின் குரல் தொடர்ந்து பலமாக ஒலிக்கட்டும்' எனக் குறிப்பிட்டிருந்தார்.
ஸ்டாலினின் வாழ்த்து செய்திக்கு ராகுல் நன்றி தெரிவித்தார். அதில், ''நன்றி, அன்பு சகோதரர் ஸ்டாலின் அவர்களே.. தெற்கில் இருந்து வடக்கு வரை இந்தியாவின் ஒவ்வொரு குரலும் பார்லிமென்டில் ஒலிப்பதை உறுதி செய்வோம். நமது அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கூட்டாட்சி கட்டமைப்பை வலுப்படுத்துவோம்'' எனக் கூறியுள்ளார்.