'யுவ நிதி'க்கு இளைஞர்களிடம் ஆர்வமின்மை 7 நாட்களில் 19,800 பேர் மட்டுமே பதிவு
'யுவ நிதி'க்கு இளைஞர்களிடம் ஆர்வமின்மை 7 நாட்களில் 19,800 பேர் மட்டுமே பதிவு
'யுவ நிதி'க்கு இளைஞர்களிடம் ஆர்வமின்மை 7 நாட்களில் 19,800 பேர் மட்டுமே பதிவு
ADDED : ஜன 03, 2024 07:44 AM
பெங்களூரு: காங்கிரஸ் அரசின் ஐந்தாவது வாக்குறுதியான 'யுவ நிதி' திட்டத்திற்கு, பட்டதாரிகளிடம் ஆர்வம் இல்லாததால், விண்ணப்பம் துவங்கிய ஏழு நாட்களில், 19,800 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.
கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு, தேர்தலின் போது அளித்த ஐந்தில், நான்கு வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டது. இது, மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
ஐந்தாவது வாக்குறுதியாக, 'பட்டதாரிகள், டிப்ளமோ முடிந்து ஆறு மாதங்களில் வேலை கிடைக்கவில்லை என்றால், பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் 3,000 ரூபாய்; டிப்ளமோ முடித்தவர்களுக்கு 1,500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்' என அறிவிக்கப்பட்டிருந்தது.
மாநிலத்தில், 2022 - 23ல் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள், இத்திட்டத்துக்கு தகுதியானவர்கள் என அரசு அறிவித்திருந்தது. இதன்படி, இத்திட்டத்திற்கு நடப்பாண்டு, 5.3 லட்சம் பேர் தகுதியாக உள்ளனர்.
இத்திட்டத்துக்கான விண்ணப்பிக்கும் பணியை, டிச., 26ம் தேதி முதல்வர் சித்தராமையா துவக்கி வைத்தார். வரும் 12ம் தேதி ஷிவமொகாவில் இத்திட்டம் துவங்கப்பட உள்ளது.
டிச., 27 முதல் ஜன., 1ம் தேதி மாலை வரை ஏழு நாட்களில், 19,800 பேர் மட்டுமே விண்ணப்பித்து உள்ளனர். இது நான்கு சதவீதம் பேர் மட்டுமே.
அதிகாரி ஒருவர் கூறுகையில், 'காங்கிரஸ் அரசின் நான்கு வாக்குறுதிகள் பொது மக்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது. திட்டத்தின் பலனை பெற, பலரும் ஆன்லைனில் பதிவிட்டதால், சர்வர் செயலழிப்பு சம்பவங்கள் நடந்தது.
'அதுபோன்று, 'யுவ நிதி' திட்டத்துக்கும் நடக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால், இளைஞர்கள் மத்தியில் இதற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. ஏன் என்று தெரியாமல் யோசித்து கொண்டிருக்கிறோம்,'' என்றார்.