கோல்கட்டா அணி முதல் வெற்றி: குயின்டன் அரைசதம் விளாசல்
கோல்கட்டா அணி முதல் வெற்றி: குயின்டன் அரைசதம் விளாசல்
கோல்கட்டா அணி முதல் வெற்றி: குயின்டன் அரைசதம் விளாசல்

'சுழல்' ஜாலம்
ராஜஸ்தான் அணிக்கு சஞ்சு சாம்சன் (13) ஏமாற்றினார். ஸ்பென்சர் ஜான்சன் வீசிய 3வது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார் யாஷஸ்வி ஜெய்ஸ்வால். ஹர்சித் ராணா, வைபவ் அரோரா பந்தில் தலா ஒரு சிக்சர் பறக்கவிட்ட கேப்டன் ரியான் பராக் (25), வருண் சக்ரவர்த்தி 'சுழலில்' சிக்கினார். மொயீன் அலி பந்தில் ஜெய்ஸ்வால் (29) அவுட்டானார். வணிந்து ஹசரங்கா (4), நிதிஷ் ராணா (8) நிலைக்கவில்லை.
குயின்டன் அபாரம்
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய கோல்கட்டா அணிக்கு மொயீன் அலி, குயின்டன் டி காக் ஜோடி துவக்கம் தந்தது. ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய 3வது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசிய குயின்டன், மகேஷ் தீக் ஷனா பந்தில் ஒரு சிக்சர் அடித்தார். தொடர்ந்து அசத்திய குயின்டன், ரியான் பராக், சந்தீப் சர்மா பந்தில் தலா ஒரு பவுண்டரி விரட்டினார். முதல் விக்கெட்டுக்கு 41 ரன் சேர்த்த போது மொயீன் (5) 'ரன் அவுட்' ஆனார்.