Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/மக்களின் நம்பிக்கையிழந்த கெஜ்ரிவால்: பா.ஜ.,

மக்களின் நம்பிக்கையிழந்த கெஜ்ரிவால்: பா.ஜ.,

மக்களின் நம்பிக்கையிழந்த கெஜ்ரிவால்: பா.ஜ.,

மக்களின் நம்பிக்கையிழந்த கெஜ்ரிவால்: பா.ஜ.,

ADDED : பிப் 25, 2024 02:40 AM


Google News
Latest Tamil News
புதுடில்லி:''லோக்சபா தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்துள்ளதால், டில்லி மக்களின் நம்பிக்கையை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இழந்து விட்டார்,'' என, டில்லி பா.ஜ., தலைவர் வீரேந்திர சச்தேவா கூறியுள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

லோக்சபா தேர்தலில் டில்லியில் -காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்ததை அடுத்து, டில்லி மக்களுடனான தொடர்பை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இழந்து விட்டார்.

டில்லியின் புறநகர் மக்கள், வர்த்தகர்கள் மற்றும் தலித்துகள் ஆம் ஆத்மி ஆதரவாக இல்லை. இது, கெஜ்ரிவாலுக்கும் நன்றாகவே தெரியும்.

டில்லியில் உள்ள 70 சட்டசபை தொகுதிகளில் 62 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி நடத்தும் ஆம் ஆத்மி, லோக்சபா தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்ததால், மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டார்.

ஒருவரை ஒருவர் ஊழல்வாதிகள் என குற்றம் சாட்டிக் கொண்டிருந்த காங்கிரசும் ஆம் ஆத்மி தேர்தல் கூட்டணி அமைத்தவுடன் டில்லி மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்து விட்டனர்.

வடமேற்கு டில்லி தொகுதியை காங்கிரசுக்கு வழங்கியதன் மூலம், புறநகர் மக்கள் மற்றும் தலித்துகளின் நம்பிக்கையை ஆம் ஆத்மி இழந்து விட்டது.

ஆனால், யார் எந்தக் கூட்டணியில் இருந்தாலும் டில்லியில் உள்ள ஏழு லோக்சபா தொகுதிகளிலும் பா.ஜ., வெற்றிவாகை சூடும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

டில்லியில் உள்ள ஏழு தொகுதிகளில் நான்கு இடங்களில் ஆம் ஆத்மியும், மூன்றில் காங்கிரசும் போட்டியிடும் என இரு கட்சிகளும் நேற்று ஒப்பந்தம் செய்துள்ளன.

டில்லியில் ஏழு தொகுதிகளையும் 2019ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ., வென்றது.

பா.ஜ., - எம்.பி., மனோஜ் திவாரி, ''டில்லியில் தொகுதி பகிர்வால் கெஜ்ரிவால் கட்சி ஏமாற்றம் அடைந்துள்ளார். அவர் காங்கிரஸ் கட்சியின் ஊழல் குறித்து பேசியேதான் டில்லியில் ஆட்சியைக் கைப்பற்றினார். ஆனால் இப்போது இருவரும் கூட்டணி அமைத்துள்ளனர்.

''ஆம் ஆத்மி கட்சி டில்லி மக்கள் நலனில் அக்கறை செலுத்தவில்லை என்பதையே இது காட்டுகிறது. இரு கட்சிகளுமே தங்கள் நலனுக்காக இணைந்துஉள்ளன,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us