30 நாட்களில் மூன்று முறை விசாரணைக்கு ஆஜரான கார்த்தி
30 நாட்களில் மூன்று முறை விசாரணைக்கு ஆஜரான கார்த்தி
30 நாட்களில் மூன்று முறை விசாரணைக்கு ஆஜரான கார்த்தி
ADDED : ஜன 13, 2024 01:34 AM

புதுடில்லி:சீன நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு விசா வழங்க லஞ்சம் வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கில் புதுடில்லியில் உள்ள அமலாக்கத்துறை தலைமை அலுவலகம் முன் நேற்று மீண்டும் காங்., - எம்.பி., கார்த்தி ஆஜரானார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் 2011ல் மத்திய அமைச்சராக இருந்தபோது, அவரது மகன் கார்த்தி தன் செல்வாக்கை பயன்படுத்தி சட்டவிரோதமாக 263 சீனர்களுக்கு விசா வழங்கியதாகவும் இதற்காக 50 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும் சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனர்.
அவர்கள் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை அடிப்படையில், அமலாக்கத் துறை சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்தது.
சீன விசா பண மோசடி வழக்கில் கார்த்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தும் கடந்த மாதம் டிச.12 மற்றும் 16ம் தேதி விசாரணைக்கு அவர் ஆஜராகவில்லை.
இதையடுத்து டிச.23 மற்றும் இந்த மாதம் 2ம் தேதி அவர் புதுடில்லியில் உள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள் முன் ஆஜரானார்.
இந்நிலையில் லஞ்ச வழக்கு விசாரணைக்காக அமலாக்கத்துறை அதிகாரிகள் முன் கார்த்தி நேற்று மீண்டும் ஆஜரானார். கடந்த 30 நாட்களில் அவர் மூன்று தடவை அமலாக்கத்துறை முன் ஆஜராகியுள்ளார்.