கர்நாடகா இந்து நாடார் அசோசியேஷன் இன்று பொதுக்குழு கூட்டம், பொங்கல் விழா
கர்நாடகா இந்து நாடார் அசோசியேஷன் இன்று பொதுக்குழு கூட்டம், பொங்கல் விழா
கர்நாடகா இந்து நாடார் அசோசியேஷன் இன்று பொதுக்குழு கூட்டம், பொங்கல் விழா
ADDED : ஜன 27, 2024 11:15 PM
ஆரோஹள்ளி: கர்நாடக இந்து நாடார் அசோசியேஷன் சார்பில் ஆரோஹள்ளி கனகபுரா சாலை 'காமராஜர் என்கிளேவ்' குடியிருப்பு வளாகத்தில், இன்று காலை முதல் மாலை வரை பொதுக்குழுக் கூட்டம் மற்றும் பொங்கல் விழா நடக்கிறது.
காலையில் பொங்கலிடப்படுகிறது. பெண்கள் கும்மியடித்து பொங்கல் வழிபாடு செய்கின்றனர். அதைத் தொடர்ந்து விழா துவங்குகிறது.
இதில் பங்கேற்கும் அசோசியேஷன் உறுப்பினர்கள் வசதிக்காக, கனகபுரா சாலையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையம் கடைசி நிறுத்தமான 'சில்க் இன்ஸ்டிடியூட்'டில் இருந்து கூட்டம் நடக்கும் இடத்துக்கு வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பெண்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகளும் நடக்கின்றன. ஈரோடு ராஜ்குமார் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது.
விழாவில் பங்கேற்கும்படி, அசோசியேஷன் உறுப்பினர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் விபரங்களுக்கு, 94497 45948, 98452 96956, 94482 41518 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.