காந்தராஜு அறிக்கை விவேகமற்றது: அசோக் புகார்
காந்தராஜு அறிக்கை விவேகமற்றது: அசோக் புகார்
காந்தராஜு அறிக்கை விவேகமற்றது: அசோக் புகார்
ADDED : ஜன 29, 2024 07:10 AM

பெங்களூரு; “காந்தராஜு நடத்திய ஜாதி வாரி கணக்கெடுப்பு விவேகமற்றது. இது முதல்வர் சித்தராமையா கூறியபடி எழுதப்பட்ட அறிக்கை,'' என, எதிர்க்கட்சித் தலைவர் அசோக் தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று அவர் கூறியதாவது:
காந்தராஜு தயாரித்த ஜாதி வாரி கணக்கெடுப்பு, விவேகமற்றதாகும். இந்த அறிக்கையில் அவரது கையெழுத்து இல்லை. முதல்வர் சித்தராமையா கூறியபடி எழுதப்பட்ட அறிக்கையாகும்.
வீரசைவ - லிங்காயத் சமுதாயத்தை உடைத்தவர் இவரே. தற்போது ஒக்கலிகர் சமுதாயத்தில் பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கிறார்.
காந்தராஜு அறிக்கைக்கு எதிராக, துணை முதல்வர் சிவகுமார் கையெழுத்திட்டார். மற்றொரு ஒக்கலிக அமைச்சர்களும் கூட, கையெழுத்திட்டுள்ளனர். ஜாதி வாரி கணக்கெடுப்பு அறிக்கைக்கு, அரசிலேயே கருத்து வேறுபாடு எழுந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.