நாராயண கவுடா ஜாமின் மனு தீர்ப்பு 6ம் தேதி ஒத்திவைப்பு
நாராயண கவுடா ஜாமின் மனு தீர்ப்பு 6ம் தேதி ஒத்திவைப்பு
நாராயண கவுடா ஜாமின் மனு தீர்ப்பு 6ம் தேதி ஒத்திவைப்பு
ADDED : ஜன 03, 2024 07:46 AM

பெங்களூரு: கர்நாடகா ரக் ஷன வேதிகே தலைவர் நாராயண கவுடா ஜாமின் மனு மீதான தீர்ப்பு, வரும் 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
கர்நாடகாவில் உள்ள கடைகளில் பெயர் பலகைகளை, கன்னடத்தில் வைக்க கோரி கடந்த சில தினங்களுக்கு முன்பு, கர்நாடகா ரக் ஷன வேதிகே அமைப்பினர் பெங்களூரில் ஊர்வலம் சென்றனர். அப்போது கடைகளில் ஆங்கிலத்தில் வைக்கப்பட்டு இருந்த பெயர் பலகைகளை அடித்து நொறுக்கினர்.
இதுதொடர்பாக, கர்நாடகா ரக் ஷன வேதிகே தலைவர் நாராயண கவுடா உட்பட 53 பேர் கைது செய்யப்பட்டு, பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் ஜாமின் கேட்டு நாராயண கவுடா தரப்பில் அவரது வக்கீல்கள் மனு செய்தனர்.
அந்த மனு மீதான விசாரணை, தேவனஹள்ளி 5வது கூடுதல் நீதிமன்றத்தில் நேற்று நடந்தது. மனு மீதான விசாரணை முடிந்த நிலையில், தீர்ப்பை வரும் 6ம் தேதிக்கு ஒத்திவைத்து, நீதிபதி உத்தரவிட்டார்.