கோகர்ணாவில் கணவருடன் சண்டையிட்ட ஜப்பான் பெண் கேரளாவில் கண்டுபிடிப்பு
கோகர்ணாவில் கணவருடன் சண்டையிட்ட ஜப்பான் பெண் கேரளாவில் கண்டுபிடிப்பு
கோகர்ணாவில் கணவருடன் சண்டையிட்ட ஜப்பான் பெண் கேரளாவில் கண்டுபிடிப்பு
ADDED : பிப் 11, 2024 12:01 AM

உத்தர கன்னடா : சுற்றுலா வந்த ஜப்பானிய பெண், கணவருடன் ஏற்பட்ட சண்டையால், கோபித்து கொண்டு வெளியேறினார். கேரளாவில் கண்டு பிடிக்கப்பட்டு, கணவருடன் ஒப்படைக்கப்பட்டார்.
ஜப்பான் நாட்டை சேர்ந்தவர் எமி யமசாகி, 43. இவரது கணவர் டாய் யமசாகி. இருவரும் கடந்த 4ம் தேதி உத்தர கன்னடா மாவட்டம் கோகர்ணாவுக்கு வந்தனர். அங்குள்ள நேச்சர் காட்டேஜில் தங்கினர். மறுநாள் காலை 10:15 மணியளவில் காட்டேஜில் இருந்து வெளியே வந்தவர் காணாமல் போனார்.
இது குறித்து அவரது கணவர் டாய் யமசாகி, கோகர்ணா போலீசில் புகார் செய்தார். அவரை கண்டுபிடிக்க, எஸ்.ஐ., காதர் பாஷா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
எமி யமசாகி காணாமல் போனாலும், அவரை ஆன்லைன் மூலம் அதிகாரிகள் கண்காணித்த போது, அவர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருப்பது தெரியவந்தது. அங்கு சென்ற போலீசார் அவரை கண்டுபிடித்தனர்.
அவரிடம் விசாரித்த போது, கோகர்ணாவில் தங்கியிருந்த போது, கணவருடன் சண்டை ஏற்பட்டளது. இதனால் கோபமடைந்து, ரயில் ஏறி கேரளா வந்ததாக தெரிவித்தார்.