சிறையில் அடைக்கப்பட்ட எம்.எல்.ஏ., சகோதரர்; அதிகாரம் படைத்தவருடன் மோதியதால் சிக்கல்
சிறையில் அடைக்கப்பட்ட எம்.எல்.ஏ., சகோதரர்; அதிகாரம் படைத்தவருடன் மோதியதால் சிக்கல்
சிறையில் அடைக்கப்பட்ட எம்.எல்.ஏ., சகோதரர்; அதிகாரம் படைத்தவருடன் மோதியதால் சிக்கல்

நீக்கம்
அ.தி.மு.க., விசுவாசியான முருகேசன், 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஓட்டப்பிடாரம் தொகுதியில் வெற்றி பெற்றவர்களுக்கு உறுதுணையாக இருந்துள்ளார். 2019ல் நடந்த சட்டசபைக்கான இடைத்தேர்தலில், அவரது தம்பி சண்முகையா தி.மு.க., சார்பில் போட்டியிட்டார். அவருக்கு மறைமுகமாக உதவினார் என்பதற்காக, அ.தி.மு.க.,வில் இருந்து முருகேசன் நீக்கப்பட்டார்.
இது குறித்து, போலீசார் கூறியதாவது:
சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகேசன் மீது ஏற்கனவே 17 புகார்கள் உள்ளன. அவற்றில், 12 புகார்கள் நில அபகரிப்பு தொடர்பானவை. ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,வின் சகோதரர் என்பதால், போலீசாரும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
இடைஞ்சல்
அதிகார வர்க்கத்தில் இருக்கும் ஒரு முக்கிய பிரமுகருக்கு சொந்தமானதாக இருக்கும் சோலார் நிறுவனத்துக்கு எதிராக முருகேசன் செயல்பட்டுள்ளார். அதை முடக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு அவர் செயல்படுவது தெரிந்து, அவருக்கு சிலர் வாயிலாக எச்சரிக்கை அளிக்கப்பட்டது. ஆனால், அதை அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.