Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/அரசியலில் குதித்தார் வேகமாக: சில நாட்களில் வெளியேறினார் சோகமாக: கிரிக்கெட் வீரரின் "விளையாட்டு"

அரசியலில் குதித்தார் வேகமாக: சில நாட்களில் வெளியேறினார் சோகமாக: கிரிக்கெட் வீரரின் "விளையாட்டு"

அரசியலில் குதித்தார் வேகமாக: சில நாட்களில் வெளியேறினார் சோகமாக: கிரிக்கெட் வீரரின் "விளையாட்டு"

அரசியலில் குதித்தார் வேகமாக: சில நாட்களில் வெளியேறினார் சோகமாக: கிரிக்கெட் வீரரின் "விளையாட்டு"

ADDED : ஜன 06, 2024 01:39 PM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: முன்னாள் கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு, ஜெகன்மோகனின் ஒய்.எஸ்.ஆர்., காங்.,கட்சியில் கடந்த வாரம் இணைந்தார். தற்போது அரசியலில் இருந்து சிறிது காலம் ஓய்வு பெறப்போவதாகக் கூறி கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதனால் அரசியல் என்றால் விளையாட்டாப் போச்சா? என சமூக வலைதளத்தில் விவாதம் கிளம்பி உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு பல சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். ஐ.பி.எல் போட்டிகளில் சென்னை அணிக்காக விளையாடி வந்தார். கடந்த சீசனுடன் ஐ.பி.எல் போட்டியில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இந்நிலையில் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் அம்பத்தி ராயுடு கடந்த 28ம் தேதி ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை நேரில் சந்தித்து தன்னை ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டார். தற்போது ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக அம்பத்தி ராயுடு அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “ஒய்.எஸ்.ஆர்.சி.பி., கட்சியிலிருந்து விலகவும், அரசியலிலிருந்து சிறிது காலம் ஒதுங்கவும் முடிவு செய்துள்ளேன் என்பதை அனைவருக்கும் தெரிவிக்கவே இது” என பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

கட்சியில் சேர்ந்த 9 நாள் முழுதாக முடியாத நிலையில் அம்பத்தி ராயுடு கட்சியிலிருந்து விலகி இருப்பது அக்கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்பத்தி ராயுடுவுக்கு அரசியல் என்றால் விளையாட்டாப் போச்சா? என சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டுள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us