பா.ஜ.,வில் கோஷ்டி இல்லை ஜெகதீஷ் ஷெட்டர் உறுதி
பா.ஜ.,வில் கோஷ்டி இல்லை ஜெகதீஷ் ஷெட்டர் உறுதி
பா.ஜ.,வில் கோஷ்டி இல்லை ஜெகதீஷ் ஷெட்டர் உறுதி
ADDED : ஜன 29, 2024 07:26 AM

ஹுப்பள்ளி: ''தார்வாட் பா.ஜ.,வில் கோஷ்டி இல்லை,'' என்று, ஜெகதீஷ் ஷெட்டர் கூறியுள்ளார்.
ஹுப்பள்ளியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
நான் காங்கிரசில் இருந்த போது, பா.ஜ.,வுக்கு மீண்டும் வரும்படி எனக்கு பலர் அழைப்பு விடுத்தனர். விஜயேந்திரா பா.ஜ., தலைவரான பின்னர், என்னிடம் பேசினார். பா.ஜ., மேலிட தலைவர்கள் அழைப்பின்படி, டில்லி சென்றேன். அமித்ஷா, நட்டாவை சந்தித்து பேசினேன்.
கடந்த காலத்தை மறந்து விடும்படி என்னிடம் கூறினர். உங்களுக்கு கட்சி உரிய மரியாதை தரும் என்றனர். இதனால் மீண்டும் பா.ஜ.,வில் இணைந்தேன். பா.ஜ., ஒருங்கிணைப்பு கமிட்டி கூட்டத்தில், என் மீது அன்பு மழை பொழிந்தனர்.
தார்வாட் மாவட்ட பா.ஜ.,வில், பிரஹலாத் ஜோஷி கோஷ்டி, ஷெட்டர் கோஷ்டி என்று இல்லை. எங்கள் ஒரே கோஷ்டி பா.ஜ., தான். நான் காங்கிரசில் இருந்த போது, ராமண்ணா லமானியை மட்டும், பா.ஜ.,வில் இருந்து அழைத்து சென்றேன். அவரது எதிர்காலத்தை அவரே முடிவு செய்வார். காங்கிரஸ் தலைவர்களை பற்றி, நான் எங்கும் குறை சொல்லவில்லை. என்னால் அவர்களுக்கு கிடைத்த லாபம் பற்றி, அவர்களுக்கு நன்கு தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.