Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/முதல்வர் பதவி போனாலும் பரவாயில்லை; காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கிடைத்தால் போதும்: உமர் அப்துல்லா

முதல்வர் பதவி போனாலும் பரவாயில்லை; காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கிடைத்தால் போதும்: உமர் அப்துல்லா

முதல்வர் பதவி போனாலும் பரவாயில்லை; காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கிடைத்தால் போதும்: உமர் அப்துல்லா

முதல்வர் பதவி போனாலும் பரவாயில்லை; காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கிடைத்தால் போதும்: உமர் அப்துல்லா

Latest Tamil News
ஸ்ரீநகர்: 'என் நாற்காலியைப் பற்றி எனக்கு கவலை இல்லை. மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்' என ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக உமர் அப்துல்லா நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: மாநில அந்தஸ்து என்பது ஜம்மு காஷ்மீர் மக்களின் உரிமை. மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்றால் மாநில சட்டசபை கலைக்கப்பட வேண்டும் என ஒரு செய்தித்தாளில் படித்தேன். அப்படியானால் அது நடக்கட்டும்.

கவலை இல்லை

என் நாற்காலியைப் பற்றி எனக்கு கவலை இல்லை. எங்கள் எம்.எல்.ஏ.க்களை பயமுறுத்துவதற்காக இந்த செய்திகள் செய்தித் தாள்களில் விதைக்கப்பட்டுள்ளன. இதனால் அவர்கள் இன்னும் 5 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். மாநில அந்தஸ்து எந்த எம்.எல்.ஏ.வுக்கோ அல்லது எங்கள் அரசாங்கத்துக்கோ அல்ல. அது ஜம்மு காஷ்மீர் மக்களுக்காக.

எங்கள் எம்.எல்.ஏக்கள் அதற்கு ஒரு தடையாக இருக்க மாட்டார்கள். இந்தக் கதை எங்கிருந்து வந்தது என்று எனக்குத் தெரியும். இங்குள்ள ஒரு செய்தித்தாளில் யார் இந்தக் கதையைப் போட்டார்கள் என்பது எனக்குத் தெரியும். இது எம்.எல். ஏ,க்களை பயமுறுத்துவதற்காக மட்டுமே போடப்பட்டது.

@subtitle@பயமுறுத்த முயற்சிக்காதீர்கள்

மாநில அந்தஸ்து வழங்க சட்டசபை கலைக்கப்பட்டு புதிய தேர்தல்கள் நடத்தப்பட வேண்டுமானால் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. மாநில அந்தஸ்து வழங்கியமறுநாள் நான் கவர்னரிடம் சென்று சட்டசபையை கலைக்க பரிந்துரைப்பேன். எங்களை பயமுறுத்த முயற்சிக்காதீர்கள். மாநில அந்தஸ்து எங்கள் உரிமை, அதை எங்களிடம் திருப்பி கொடுங்கள். இவ்வாறு உமர் அப்துல்லா கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us