உயர் வகுப்பினருக்கு தான் மத்திய அமைச்சர் பதவியா ? பா.ஜ., தலித் எம்.பி. ஆதங்கம்
உயர் வகுப்பினருக்கு தான் மத்திய அமைச்சர் பதவியா ? பா.ஜ., தலித் எம்.பி. ஆதங்கம்
உயர் வகுப்பினருக்கு தான் மத்திய அமைச்சர் பதவியா ? பா.ஜ., தலித் எம்.பி. ஆதங்கம்
UPDATED : ஜூலை 10, 2024 01:51 AM
ADDED : ஜூலை 10, 2024 01:49 AM

பெங்களூரு: மத்திய அமைச்சர் பதவி உயர் வகுப்பினருக்கு தானா என கர்நாடகா பா.ஜ., தலித் எம்.பி., ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
கர்நாடகா மாநிலம் விஜயபுரா லோக்சபா பா.ஜ., தலித் எம்.பி., ரமேஷ் ஜிகாஜினாகி 75, இம்முறை பிரதமர் மோடி அமைச்சரவையில் தனக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில் கிடைக்கவில்லை.
இது குறித்து அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது, ஏழு முறை எம்.பி.யாக இருந்து வருகிறேன். 2016-2019ம் ஆண்டுகளில் மத்திய இணை அமைச்சராக இருந்துள்ளேன்.
இம்முறை எனக்கு மத்திய அமைச்சர் பதவி ஏன் வழங்கவில்லை? . தலித் என்பதாலா? உயர் வகுப்பினருக்கு தான் மத்திய அமைச்சர் பதவியா ? இதனை என் ஆதரவாளர்களே என்னிடம் கேட்கின்றனர் என்றார்.