ADDED : ஜூலை 10, 2024 01:29 AM
கொச்சி, கேரளாவில் கோழிக்கோடு, மலப்புறம், எர்ணாகுளம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 'வெஸ்ட் நைல்' காய்ச்சல், அமீபா மூளைக்காய்ச்சல் பரவி வருகிறது. இதுபோல பல மாவட்டங்களில் டெங்கு மற்றும் எலி காய்ச்சல் பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் திருவனந்தபுரம் அருகே, நெய்யாற்றின் கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான விடுதியில் தங்கியிருந்த ஒன்பது பேருக்கு கடந்த சில நாட்களாக கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.
அனைவரும் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பரிசோதனையில் ஒருவருக்கு காலரா இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் அனு, 26, என்பவர் நேற்று இறந்தார். இதைத் தொடர்ந்து, மற்றவர்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.