ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை
ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை
ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை
ADDED : ஜூன் 06, 2025 04:59 AM
பெங்களூரு: கர்நாடகாவின் பெங்களூரில் முதல்வர் சித்தராமையா தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடந்தது.
ஐ.பி.எல்., கோப்பை வெற்றி விழாவை காண சின்னசாமி மைதானத்தின் முன் ஏராளமானோர் குவிந்த நிலையில், நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தது தொடர்பாக அப்போது விவாதிக்கப்பட்டது. கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய சித்த ராமையா கூறியதாவது:
கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியான சம்பவம் தொடர்பான விசாரணையை, கர்நாடகாவின் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி மைக்கேல் குன்ஹா தலைமையிலான ஒரு நபர் கமிஷனிடம் ஒப்படைக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
அது தொடர்பான அறிக்கையை அடுத்த 30 நாட்களுக்குள் வழங்குமாறு கமிஷனிடம் கூறிஉள்ளோம்.
இந்த விவகாரத்தில், ஆர்.சி.பி., அணி நிர்வாகிகள், நிகழ்ச்சி நடத்திய நிறுவன அதிகாரிகள் உள்ளிட்டோரை கைது செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.