ADDED : ஜூன் 06, 2025 06:40 AM
அரியாங்குப்பம்; கடலுார் சாலை, தவளக்குப்பம் சாராயக்கடை அருகில் நேற்று ஒருவர் இறந்து கிடந்தார். தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து, இறந்தவரின் உடலை கைப்பற்றி, கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
போலீசார் விசாரணையில், இறந்தவர் சேலம் அடுத்த ஆத்துாரை சேர்ந்த செல்வம், 52, என்பது தெரியவந்தது. இவருக்கு திருமணம் ஆகாமலும், பெற்றோரை இழந்த இவர், புதுச்சேரிக்கு வந்துள்ளார். தவளக்குப்பத்தில், தங்கி, வெளியில் கிடக்கும் பேப்பர், பிளாஸ்டிக் பொருட்களை பழைய இரும்பு கடையில் விற்று அதன் மூலம் சாப்பிட்டு வந்ததும் தெரியவந்தது.