Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/அபாய அறிவிப்பு வெளியிட்ட இண்டிகோ விமானம்; பெங்களூருவில் அதிர்ச்சி

அபாய அறிவிப்பு வெளியிட்ட இண்டிகோ விமானம்; பெங்களூருவில் அதிர்ச்சி

அபாய அறிவிப்பு வெளியிட்ட இண்டிகோ விமானம்; பெங்களூருவில் அதிர்ச்சி

அபாய அறிவிப்பு வெளியிட்ட இண்டிகோ விமானம்; பெங்களூருவில் அதிர்ச்சி

ADDED : ஜூன் 21, 2025 05:39 PM


Google News
Latest Tamil News
பெங்களூரு: சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த இண்டிகோ விமானம், குறைவான எரிபொருள் இருந்த காரணத்தால், 'மே டே' என்ற அபாய அறிவிப்பை வெளியிட்டது. பின்னர், பெங்களூரு விமான நிலையத்தில் பத்திரமாக தரை இறங்கியது.

விமான போக்குவரத்து துறையில், 'மே டே' என்ற வார்த்தை, பெரும் அபாயத்தை குறிப்பதாகும். பைலட், விமானம் ஆபத்தில் இருப்பதை கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிப்பதற்கு, 'மே டே' என்று மூன்று முறை அறிவிப்பது வழக்கம்.

இன்று சென்னை நோக்கி பறந்து கொண்டிருந்த இண்டிகோ விமானத்தின் பைலட், 'மே டே' என்று மூன்று முறை அறிவித்தார்.

விமான எரிபொருள் குறைவாக இருப்பதாகவும் தெரிவித்தார். இதையடுத்து அவர் பெங்களூரு விமான நிலையத்தில் தரை இறங்க அவசர அனுமதி வழங்கப்பட்டது. விமானம் பத்திரமாக தரை இறங்கியது.

பைலட் ஏன் அவ்வாறு அறிவித்தார், எரிபொருள் நிலவரம் என்ன என்பது பற்றி விசாரணை நடந்து வருகிறது.

ஆமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கி 270 பேருக்கும் மேல் பலியான நிலையில், அடுத்தடுத்து விமானங்கள் தொழில்நுட்ப கோளாறு காரணங்களால் தரை இறங்குவது பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் கடந்த வியாழக்கிழமை நடந்தது. இந்த சம்பவம் தொடர்பாக, பைலட்டுகள் பணிப்பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us