விமான விபத்து ஐ.நா., தலையீடு இந்தியா நிராகரிப்பு
விமான விபத்து ஐ.நா., தலையீடு இந்தியா நிராகரிப்பு
விமான விபத்து ஐ.நா., தலையீடு இந்தியா நிராகரிப்பு
ADDED : ஜூன் 28, 2025 01:13 AM
புதுடில்லி: குஜராத்தின் ஆமதாபாதில், கடந்த 12ல், ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் 787 - 8 ரக விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விழுந்து நொறுங்கியதில், அதில் பயணித்த 241 பேர் உட்பட 274 பேர் உயிரிழந்தனர்.
உலகையே உலுக்கிய இந்த கோர விபத்து குறித்து, ஏ.ஏ.ஐ.பி., எனப்படும் விமான விபத்து புலனாய்வு அமைப்பு விசாரித்து வருகிறது. விமானத்தின் கருப்பு பெட்டியும் கண்டுபிடிக்கப்பட்டு, அதிலிருந்த தகவல்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஐ.நா.,வின் விமான போக்குவரத்து அமைப்பான, ஐ.சி.ஏ.ஓ., எனப்படும் சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பு, ஏர் இந்தியா விமான விபத்து விசாரணையில் இந்திய அதிகாரிகளுக்கு உதவ தாமாக முன்வந்தது.
இந்தியாவில் உள்ள ஐ.சி.ஏ.ஓ., அமைப்பின் அதிகாரியை, விசாரணையின் கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கும்படி அந்த அமைப்பு கேட்டுக் கொண்டது. எனினும், இந்த கோரிக்கையை நம் அதிகாரிகள் நிராகரித்து விட்டனர்.
மலேஷியாவில் 2014; உக்ரைனில், 2020ல் விமானங்கள் விபத்துக்குள்ளான போது, அந்நாடுகள் கேட்டுக் கொண்டதால், ஐ.சி.ஏ.ஓ., அமைப்பு விசாரணைக்கு உதவியது குறிப்பிடத்தக்கது.