கட்டடம் இடிந்து விபத்து 3 தொழிலாளர்கள் பலி
கட்டடம் இடிந்து விபத்து 3 தொழிலாளர்கள் பலி
கட்டடம் இடிந்து விபத்து 3 தொழிலாளர்கள் பலி
ADDED : ஜூன் 28, 2025 01:09 AM
திருச்சூர்: கேரளாவின் திருச்சூர் மாவட்டம் கோடக்கராவில், 40 ஆண்டு பழமையான கட்டடம் இருந்தது.
இதில் மேற்கு வங்கத்தை சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், 17 பேர் தங்கியிருந்தனர்.
நேற்று காலை தொழிலாளர்கள் வேலைக்கு தயாராகிக்கொண்டிருந்தபோது கட்டடம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் மூன்று பேர் இடிபாடுகளில் சிக்கினர். 14 பேர் காயம் இன்றி தப்பினர்.
சம்பவ இடத்துக்கு வந்த பேரிடர் மீட்புப்படையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் இடிபாடுகளில் சிக்கியிருந்த மூவரையும் பொக்லைன் இயந்திர உதவியுடன் இரண்டரை மணிநேரம் போராடி மீட்டனர்.
மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ரூபல், ராகுல், அலிம் ஆகிய மூவர் உயிரிழந்தனர்.
தொழிலாளர் ஆணைய அதிகாரிகள் விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.