Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/'நானும் அயோத்தியில் ராமரை தரிசனம் செய்வேன்'

'நானும் அயோத்தியில் ராமரை தரிசனம் செய்வேன்'

'நானும் அயோத்தியில் ராமரை தரிசனம் செய்வேன்'

'நானும் அயோத்தியில் ராமரை தரிசனம் செய்வேன்'

ADDED : ஜன 12, 2024 11:25 PM


Google News
பெங்களூரு: ''நான் ஹிந்து விரோதி அல்ல. அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்வேன்,'' என, பா.ஜ., தலைவர்களுக்கு, முதல்வர் சித்தராமையா பதிலடி அளித்துள்ளார்.

இதுகுறித்து எக்ஸ் எனும் சமூக வலைதளத்தில் முதல்வர் சித்தராமையா கூறியிருப்பதாவது:

ராம் லாலா விக்ரஹத்துக்கு மாலை அணிவிக்கும் விழாவில் பங்கேற்க மாட்டேன் என்று எங்கள் கட்சி மூத்த தலைவர்களின் நிலைபாட்டை நான் ஆதரிக்கிறேன் என்று கூறியதற்கு எதிராக, மாநில பா.ஜ., தலைவர்கள், என்னை ஹிந்து விரோதியாக சித்திரிக்க முயற்சிக்கின்றனர்.

நான் ஹிந்துக்களுக்கு எதிரானவன் அல்ல. ராமசந்திரனுக்கு எதிரானவனும் அல்ல. ஜன., 22ம் தேதி அயோத்தியில் பா.ஜ., நாடக குழுவின் நிகழ்ச்சிக்கு பின், அயோத்திக்கு சென்று, ராமர் கோவிலுக்கு செல்ல முடிவு செய்துள்ளேன். ராமரை தரிசித்த படங்களை, கதை அளப்பவர்களுடன் பகிர்ந்து கொள்வேன்.

சிலை நிறுவும் மத நிகழ்ச்சியை அரசியல் பிரசார நிகழ்வாக பிரதமர் மோடி, சங்க்பரிவார் தலைவர்கள் மாற்றியதை, நான் ஏற்கனவே குறிப்பிட்டேன். எனவே தான் அந்நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. இதனால் நாங்கள் கடவுள் - மதத்திற்கு எதிரானவர்கள் அல்ல.

நாங்கள் மட்டுமல்ல, உத்தரக்கண்டை சேர்ந்த சங்கராச்சார்யாவின் ஜோதிஷ் பீடத்தின் மூத்த சுவாமிகள் சங்கராச்சாரியா கூட, ஜன., 22ம் தேதி அயோத்தி செல்லமாட்டோம் என கூறியுள்ளனர்.

இதற்கு பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர் என்ன கூறுவார்கள் என்பதை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு எனக்கு அழைப்பு வரவில்லை. ஸ்ரீராமரை தரிசனம் செய்ய, அவர்கள் (பா.ஜ.,) பின்னால் செல்ல மாட்டோம்.

ஜன., 22ம் தேதி கர்நாடகா முழுதும் உள்ள ராமர் கோவில்களில் எங்கள் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் சிறப்பு பிரார்த்தனை செய்வர்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us