ADDED : மே 18, 2025 11:28 PM

கொரோனா உயிரிழப்பு விவகாரத்தில், மத்திய பா.ஜ., அரசின் தரவுக்கும், அதிகாரப்பூர்வ தரவுக்கும் நிறைய முரண்பாடுகள் உள்ளன. 2021ல் மட்டும், நாடு முழுதும் 20 லட்சம் இறப்புகள் பதிவாகி உள்ளன. இது, மத்திய அரசு தெரிவித்ததை விட 6 மடங்கு அதிகம். இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்.
ஜெய்ராம் ரமேஷ், பொதுச்செயலர், காங்.,
புறக்கணிக்க வேண்டும்!
நம் நாட்டின் நிலைப்பாட்டை தெரிவிக்க, சர்வதேச நாடுகளுக்கு எம்.பி.,க்களை அனுப்ப வேண்டிய அவசியமே இல்லை. அனைத்து விவகாரங்களிலும் அரசியல் செய்வதை, பா.ஜ., வழக்கமாக வைத்துள்ளது. இதை, 'இண்டி' கூட்டணியில் உள்ள கட்சிகள் புறக்கணிக்க வேண்டும்.
சஞ்சய் ராவத், ராஜ்யசபா எம்.பி., - உத்தவ் சிவசேனா பிரிவு
ஜனநாயகத்தின் அழகு!
பாகிஸ்தானின் தில்லாலங்கடி வேலைகளை எடுத்துரைக்க, சர்வதேச குழுவில் என்னை தேர்வு செய்ததற்கு பிரதமர் மோடிக்கு நன்றி. அசாதுதீன் ஓவைசி உடன் சேர்ந்து, பாகிஸ்தானின் நாடகங்களை அம்பலப்படுத்துவேன். இது தான் ஜனநாயகத்தின் அழகு.
நிஷிகாந்த் துபே, லோக்சபா எம்.பி., - பா.ஜ.,