மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை கேரளாவில் கணவன், மனைவி கைது
மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை கேரளாவில் கணவன், மனைவி கைது
மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை கேரளாவில் கணவன், மனைவி கைது
ADDED : ஜூன் 04, 2025 01:37 AM
திருவனந்தபுரம், :கேரள மாநிலம் ஆலப்புழாவில் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு போதை பொருட்கள் விற்பனை செய்ததாக கணவன், மனைவி கைது செய்யப்பட்டனர்.
பள்ளி , கல்லுாரிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் போதைப் புழக்கத்தை தடுக்க கேரளாவில் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஆலப்புழா டூரிஸ்ட் பஸ் ஸ்டாப் அருகே ஒரு கும்பல் போதைப்பொருள் விற்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்கு சந்தேகப்படும்படி நின்ற ஒரு ஆண் மற்றும் பெண்ணை பிடித்து விசாரித்த போது அவர்களிடமிருந்து 15 கிராம் எம்.டி.எம்.ஏ. போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தியதில் அவர்கள் ஆலப்புழாவை சேர்ந்த முகமது ஷியா 40, திருச்சூர் இரிஞ்ஞாலக்குடாவை சேர்ந்த சஞ்சய் மோள் 39, என்பது தெரியவந்தது. கணவன், மனைவியான இவர்கள் கடந்த சில மாதங்களாக பெங்களூரு உட்பட்ட பகுதியிலிருந்து இந்த போதைப்பொருள், கஞ்சா உள்ளிட்டவற்றை வாங்கி வந்து ஆலப்புழாவில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் உட்பட பலருக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. இருவரும் ஆலப்புழா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.