ரெட் அலர்ட் எதிரொலி: கேரளாவில் நாளை 5 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
ரெட் அலர்ட் எதிரொலி: கேரளாவில் நாளை 5 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
ரெட் அலர்ட் எதிரொலி: கேரளாவில் நாளை 5 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
ADDED : மே 28, 2025 10:25 PM

திருவனந்தபுரம்: வானிலை மையத்தின் ரெட் அலர்ட் அறிவிப்பை அடுத்து கேரளாவில் நாளை 5 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கிறது. மழை அடுத்து வரும் நாட்களிலும் நீடிக்கும் என்று அறிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், ரெட் அலர்ட் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதையடுத்து, இடுக்கி, பத்தனம்திட்டா, கண்ணூர், எர்ணாகுளம், காசர்கோடு மாவட்டங்களில் நாளை (மே 29) அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் மாவட்ட கலெக்டர்கள் விடுமுறை அறிவித்துள்ளனர். இந்த 5 மாவட்டங்களிலும் எந்த கல்வி நிறுவனத்திலும் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளனர்.
மேலும், பல மாவட்டங்களில் இரவு நேர பயணத்திற்கும் அதிகாரிகள் தற்காலிகமாக தடை விதித்துள்ளனர். கனமழை அறிவிப்பால், சுற்றுலாத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ், அனைத்து சுற்றுலா தலங்களையும் மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக மூட வேண்டும் என்று எர்ணாகுளம் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
ஜூன் 1ம் தேதி வரை, பத்தனம்திட்டா மலைபகுதிகளுக்கு இரவு நேர பயணத்தை அதிகாரிகள் தடை செய்துள்ளனர்.