ரூ.3.5 கோடி ஹெராயின் பறிமுதல்: 4 பேர் கைது
ரூ.3.5 கோடி ஹெராயின் பறிமுதல்: 4 பேர் கைது
ரூ.3.5 கோடி ஹெராயின் பறிமுதல்: 4 பேர் கைது
ADDED : செப் 20, 2025 09:39 PM
புதுடில்லி,:டில்லி, ராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களில் இருந்து போதைப் பொருள் கடத்தி வந்து டில்லியில் விற்கும் கும்பல் குறித்து தனிப்படையினர் தீவிரமாக விசாரித்து வந்தனர்.
ரகசிய தகவல் அடிப்படையில், கிழக்கு டில்லி நந்த் நகரியில் சுரேந்தர் பாண்டே,29, என்பவர் சுற்றிவளைத்துக் கைது செய்யப்பட்டு, 301 கிராம் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.
அவரிடம் நடத்திய விசாரணை அடிப்படையில், உத்தரப் பிரதேச மாநிலம் பரித்பூரைச் சேர்ந்த அவரது கூட்டாளி நயீம், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கைது செய்யப்பட்டு 120 கிராம் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.
நந்த் நக்ரியைச் சேர்ந்த நீரு என்ற பெண்ணுக்கும் இந்தக் கடத்தலில் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்ததையடுத்து அவரும் கைது செய்யப்பட்டார்.
அதைத் தொடர்ந்து, நீருவுக்கு போதைப் பொருள் சப்ளை செய்யும் நசீரும் பரேலியில் சிக்கினார். அவரிடம் இருந்து 110 கிராம் ஹெராயின் கைப்பற்றப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்டுள்ள 531 கிராம் உயர்தர ஹெராயினின் சர்வதேச சந்தை மதிப்பு 3.5 கோடி ரூபாய் என போலீசார் கூறினர்.