அமீபா மூளைக்காய்ச்சல் பாதிப்பு கேரளாவில் 1 மாதத்தில் 7 பேர் பலி
அமீபா மூளைக்காய்ச்சல் பாதிப்பு கேரளாவில் 1 மாதத்தில் 7 பேர் பலி
அமீபா மூளைக்காய்ச்சல் பாதிப்பு கேரளாவில் 1 மாதத்தில் 7 பேர் பலி
ADDED : செப் 20, 2025 10:41 PM
திருவனந்தபுரம்:கேரள மாநிலம் கோழிக்கோடு, மலப்புறம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் சில மாதங்களாக அமீபா மூளைக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கோழிக்கோடு மருத்துவமனையில் 30க்கும் மேற்பட்டோர் இதனால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் திருச்சூர் மாவட்டம் சாவக்காடு பகுதியைச் சேர்ந்த ரஹிம் 59, இங்கு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அமீபா மூளைக்காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. அவர் நேற்று உயிரிழந்தார். இதை தொடர்ந்து இந்த மாதத்தில் மட்டும் இக்காய்ச்சலால் பலியானவர்கள் எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது. இந்த ஆண்டில் 18 பேர் இறந்துள்ளனர்.
இதற்கிடையில் அசுத்தமான மற்றும் மாசுபட்ட தண்ணீர் மூலம் அமீபா மூளைக்காய்ச்சல் பரவுவதாக கூறப்படுவதை தொடர்ந்து கேரளாவில் போராட்டம் நடத்துபவர்கள் மீது தண்ணீரை பீச்சியடிப்பதை நிறுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி சார்பில் டி.ஜி.பி. மற்றும் மனித உரிமை ஆணையத்தில் மனு தரப்பட்டுள்ளது.