ஹனுமந்தையாவுக்கு வாய்ப்பு மாதிக சமுதாயம் கெடு
ஹனுமந்தையாவுக்கு வாய்ப்பு மாதிக சமுதாயம் கெடு
ஹனுமந்தையாவுக்கு வாய்ப்பு மாதிக சமுதாயம் கெடு
ADDED : பிப் 24, 2024 04:00 AM

பெங்களூரு : ராஜ்யசபா சீட் கை நழுவியதால், ஹனுந்தையாவுக்கு சட்ட மேலவையில் வாய்ப்பளிக்கும்படி, காங்கிரசுக்கு நெருக்கடி கொடுக்கப்படுகிறது.
இதுதொடர்பாக, கர்நாடக மாதிக சங்கங்கள் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கை:
ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்த ஹனுமந்தையா, ஒதுக்கப்பட்ட சமுதாயங்களுக்கு ஆதரவாக பார்லிமென்டில் குரல் கொடுத்தார். இவரை ராஜ்யசபா உறுப்பினர் பதவியில் நீடிக்காமல், மாதிக சமுதாயத்துக்கு காங்கிரஸ் அநியாயம் செய்துள்ளது. இது எங்களுக்கு வருத்தமளிக்கிறது.
கர்நாடக மாதிக சமுதாயத்தினருக்கு கிடைக்க வேண்டிய பதவியை, டில்லியை சேர்ந்த யாரோ ஒருவருக்கு காங்கிரஸ் கொடுத்தது கண்டிக்கத்தக்கது. மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் தேசிய தலைவராக இருக்கும் காலத்திலும் கூட, மாதிக சமுதாயத்தினருக்கு சரியான முக்கியத்துவம் கிடைக்கவில்லை.
ராஜ்யசபா பதவி கை நழுவியதால், ஹனுமந்தையாவுக்கு சட்ட மேலவையில் வாய்ப்பளிக்க வேண்டும். இல்லாவிட்டால் லோக்சபா தேர்தலில் பின் விளைவை அக்கட்சி சந்திக்க வேண்டி வரும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.