Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/அரை நிர்வாணமாக்கி ஊர்வலம் பள்ளி மாணவருக்கு கொடுமை

அரை நிர்வாணமாக்கி ஊர்வலம் பள்ளி மாணவருக்கு கொடுமை

அரை நிர்வாணமாக்கி ஊர்வலம் பள்ளி மாணவருக்கு கொடுமை

அரை நிர்வாணமாக்கி ஊர்வலம் பள்ளி மாணவருக்கு கொடுமை

ADDED : ஜன 26, 2024 11:56 PM


Google News
கலபுரகி- பள்ளி மாணவரை அரை நிர்வாணமாக்கி, சக மாணவர்கள் ஊர்வலம் நடத்திய சம்பவம், கலபுரகி நகரில் நடந்துள்ளது.

கலபுரகி நகரின், பள்ளி மாணவர் விடுதி ஒன்றில் குடியரசு தினத்தை ஒட்டி, நேற்று காலை அம்பேத்கர் உருவப்படம் வைத்து மரியாதை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாணவர் ஒருவர் பங்கேற்கவில்லை.

கோபமடைந்த சக மாணவர்கள், அந்த மாணவரைத் தாக்கி, அரை நிர்வாணமாக்கினர். அவரிடம் அம்பேத்கரை படத்தைக் கொடுத்து, ஊர்வலம் நடத்தினர்.

இந்த சம்பவத்தை பலரும் கண்டித்துள்ளனர். மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகின்றனர்.

தகவலறிந்து அங்குச் சென்ற அசோக்நகர் போலீசார், விசாரணை நடத்தி தகவல் சேகரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us