அரசு கருவூலம் காலி குமாரசாமி குற்றச்சாட்டு
அரசு கருவூலம் காலி குமாரசாமி குற்றச்சாட்டு
அரசு கருவூலம் காலி குமாரசாமி குற்றச்சாட்டு
ADDED : பிப் 24, 2024 04:12 AM

பெங்களூரு : மத்திய அரசிடம் முதல்வர் சித்தராமையா, 'எங்களின் பணத்தை எங்களுக்கு தாருங்கள்' என, வலியுறுத்துவதை மாநில ம.ஜ.த., தலைவர் குமாரசாமி கிண்டல் செய்துள்ளார்.
பெங்களூரின் விதான் சவுதாவில், நேற்று குமாரசாமி கூறியதாவது:
முதல்வர் சித்தராமையா சட்ட மேலவையில் பேசும்போது, மத்திய அரசிடம் 'எங்களின் பணத்தை எங்களுக்கு தாருங்கள்' என, வலியுறுத்தினார். ஆதரவற்றவரைப் போன்று கையேந்தும் சூழ்நிலை, ஒரு மாநில முதல்வருக்கு வந்திருக்கக் கூடாது.
'கர்நாடகாவின் கருவூலம் காலியாகவில்லை. சொந்த வரி வசூலில் மாநிலம், நாட்டிலேயே முதல் இடத்தில் உள்ளது. நமது செழிப்பான மாநிலம், வாக்குறுதித் திட்டங்களால் கருவூலம் காலியாகாது' என முதல்வர் கூறியுள்ளார்.
ஆனால், அரசு கருவூலம் காலியாக உள்ளது என்பது உறுதி. இவர்கள் கொள்ளையடித்து கருவூலத்தை காலியாக்கி விட்டனர். அரசின் விவேகமற்ற செயலால், மாநிலத்துக்கு பொருளாதார பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.