Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/சுயசார்பு இந்தியாவை உருவாக்க பங்களிப்பு தேவை மாற்றுத்திறனாளிகள் குறித்து கவர்னர் பெருமிதம்

சுயசார்பு இந்தியாவை உருவாக்க பங்களிப்பு தேவை மாற்றுத்திறனாளிகள் குறித்து கவர்னர் பெருமிதம்

சுயசார்பு இந்தியாவை உருவாக்க பங்களிப்பு தேவை மாற்றுத்திறனாளிகள் குறித்து கவர்னர் பெருமிதம்

சுயசார்பு இந்தியாவை உருவாக்க பங்களிப்பு தேவை மாற்றுத்திறனாளிகள் குறித்து கவர்னர் பெருமிதம்

ADDED : ஜன 07, 2024 02:36 AM


Google News
Latest Tamil News
பெங்களூரு,: ''பல்வேறு துறைகளில் சாதனை படைக்கும் திறன் கொண்ட மாற்றத்திறனாளிகளை ஊக்கப்படுத்த வேண்டியது நமது கடமை. சுயசார்பு இந்தியாவை உருவாக்க அவர்களின் பங்களிப்பு அவசியம்,'' என, கவர்னர் தாவர்சந்த் கெலாட் பெருமிதம் கொண்டார்.

சென்னைக்கு அருகில் உள்ள முட்டுக்காட்டில் இயங்கிவரும் மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனமும், மத்திய மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுத்துறை, சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகமும் இணைந்து பெங்களுரில் 'திவ்ய கலா சக்தி' என்ற கலை நிகழ்ச்சியை நேற்று நடத்தின.

இந்த கலாசார நிகழ்வானது, கலை, இசை, நடனம், அக்ரோபாட்டிக்ஸ், யோகா உட்பட பல திறமைகள் கொண்ட மாற்றுத்திறனாளிகள், தங்கள் தனித்துவமான திறனை வெளிப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

நகரின் ரவீந்திர கலாசேத்திராவில் நடந்த நிகழ்ச்சியை, கர்நாடகா கவர்னர் தாவர்சந்த் கெலாட் துவக்கி வைத்து, பேசுகையில், ''மாற்றுத்திறனாளி குழந்தைகள், இளைஞர்கள், கலை, கலாசாரம், விளையாட்டு உட்பட பல்வேறு துறைகளில் சாதனை படைக்கும் திறன் கொண்டவர்கள். அவர்களை ஊக்கப்படுத்த வேண்டியது நமது கடமை. சுயசார்பு இந்தியாவை உருவாக்க அவர்களின் பங்களிப்பு அவசியம்,'' என்றார்.

கர்நாடகா (42), தமிழகம் (17), கேரளா (9), புதுச்சேரி (7) ஆகிய மாநிலங்களில் இருந்து மொத்தம் 75 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.

மேலும், மத்திய அரசு சார்பில், 152 மாற்றுத்திறனாளிகளுக்கு, 12.69 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கற்றல் மற்றும் கற்பித்தல் சாதனங்கள், காது கேட்கும் கருவி, மூன்று சக்கர நாற்காலி, மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலி, ஊன்றுகோல், ஸ்மார்ட் போன் போன்ற உபகரணங்கள் வழங்கப்பட்டன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us