Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ இரவிகுளம் தேசிய பூங்கா பொன்விழா ஓராண்டு நடத்த வனத்துறையினர் முடிவு

இரவிகுளம் தேசிய பூங்கா பொன்விழா ஓராண்டு நடத்த வனத்துறையினர் முடிவு

இரவிகுளம் தேசிய பூங்கா பொன்விழா ஓராண்டு நடத்த வனத்துறையினர் முடிவு

இரவிகுளம் தேசிய பூங்கா பொன்விழா ஓராண்டு நடத்த வனத்துறையினர் முடிவு

ADDED : ஜூன் 21, 2025 02:40 AM


Google News
Latest Tamil News
மூணாறு:கேரள மாநிலம் இரவிகுளம் தேசிய பூங்காவின் பொன் விழா கொண்டாட்டத்தை ஓராண்டு நடத்த வனத்துறையினர் முடிவு செய்தனர்.

மூணாறு அருகில் உள்ள இரவிகுளம் தேசிய பூங்கா 97 சதுர கி.மீ. பரப்பளவை கொண்டது. அப்பகுதியை ஆரம்ப காலத்தில் தேயிலை தோட்டங்களை நிர்வாகித்த ஆங்கிலேயர்கள் வனவிலங்குகளை வேட்டையாடும் பொழுது போக்கு பகுதியாக பயன்படுத்தினர். இரவிகுளம் 1975 மே 31ல் வனவிலங்கு சரணாலயமாகவும், 1978ல் மாநிலத்தில் முதல் தேசிய பூங்காவாகவும் அறிவிக்கப்பட்டது.

நாட்டில் அழிந்து வரும் பட்டியலில் இடம் பெற்றுள்ள வரையாடு , யானை, சிங்கவால் குரங்கு, புலி, சிறுத்தை, காட்டு மாடு உட்பட பல்வேறு வனவிலங்குகள், 140 வகை பறவைகள், நுாற்றுக்கும் மேற்பட்ட வகை வண்ணத்துப்பூச்சிகள் உள்ளன. தென்னிந்தியாவின் மிகவும் உயரமான ஆனமுடி சிகரம் (8842 அடி) பூங்காவில் உள்ளது.

பெருமை


பூங்காவில் அரிய வகை தாவரங்கள் ஏராளமாக உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் காணப்படும் 64 வகை குறிஞ்சி பூக்களில் 20க்கும் மேற்பட்ட வகை இங்குள்ள உள்ளன. அதில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் 'ஸ்டெரபாலந்தஸ் குந்தியானா' எனும் தாவரவியல் பெயர் கொண்ட நீலக் குறிஞ்சி பூக்கள் மிகவும் பிரசித்தி பெற்றது.

முழுவதும் பாதுகாக்கப்பட்டது என்பதால் பூங்காவுக்கு உட்பட்ட ராஜமலை பகுதிக்கு மட்டும் வரையாடுகளை காண சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் தேசிய பூங்காவின் பொன் விழா ஆண்டை கொண்டாட வனத்துறை தயாராகி விட்டது. அதற்காக திருவனந்தபுரத்தில்' லோகோ' வெளியிடப்பட்ட நிலையில், ஓராண்டு வரை கொண்டாட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக பல்வேறு ந





      Our Apps Available On




      Dinamalar

      Follow us