ADDED : ஜூன் 26, 2025 09:43 PM
புதுடில்லி:டில்லி திலக் மார்க்கெட்டில் நேற்று அதிகாலை நிகழ்ந்த தீ விபத்தில், இரண்டு கடைகள் தீக்கிரையாகின.
நேற்று அதிகாலை 2:55 மணிக்கு, டில்லி தீயணைப்பு படையினருக்கு, ரமேஷ் நகர் பகுதியில் உள்ள திலக் மார்க்கெட்டில் தீ பிடித்து விட்டது என்ற தகவல் வந்தது.
சம்பவ இடத்திற்கு, ஐந்து தீயணைப்பு வண்டிகள் அனுப்பி வைக்கப்பட்டன. கடுமையாக போராடி தீயை, அதிகாலை 4:05 மணிக்கு வீரர்கள் அணைத்தனர்.
இந்த விபத்தில் பொம்மை கடை, வாட்ச் கடை மற்றும் ஸ்கூட்டர் எரிந்து நாசமாகின. விபத்து ஏன் ஏற்பட்டது என்பது குறித்து டில்லி போலீசார் விசாரித்து வருகின்றனர்.