Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/பெங்களூரின் கழிவுநீர் சுத்திகரிப்பு கவர்னரிடம் விவசாயிகள் முறையீடு

பெங்களூரின் கழிவுநீர் சுத்திகரிப்பு கவர்னரிடம் விவசாயிகள் முறையீடு

பெங்களூரின் கழிவுநீர் சுத்திகரிப்பு கவர்னரிடம் விவசாயிகள் முறையீடு

பெங்களூரின் கழிவுநீர் சுத்திகரிப்பு கவர்னரிடம் விவசாயிகள் முறையீடு

ADDED : பிப் 12, 2024 06:47 AM


Google News
பெங்களூரு: 'பெங்களூரின் கழிவு நீரை கோலார், சிக்கபல்லாபூர், பெங்களூரு ரூரல் மாவட்டங்களின் ஏரிகளுக்கு பாய்ச்சுவதற்கு முன், கட்டாயமாக மூன்று கட்டங்களில் சுத்திகரித்த பின், பாய்ச்ச வேண்டும் என, அரசுக்கு உத்தரவிடுங்கள்' என கவர்னரிடம், விவசாய தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

நீர்ப்பாசன போராட்ட கமிட்டி தலைவர் ஆஞ்சனேய ரெட்டி தலைமையிலான குழுவினர், நேற்று முன்தினம் ராஜ்பவனுக்கு சென்று, கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்தனர். அவரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

நிரந்தர வறட்சி


மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

கர்நாடகாவில் நிரந்தர வறட்சி மாவட்டங்கள் என, பட்டப்பெயர் வைத்துள்ள கோலார், சிக்கபல்லாபூர் மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது. இதனால் குடிநீருக்கும், விவசாய பணிகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நிலத்தடி நீரில், புளோரைடு, நைட்ரேட், யுரேனியம், ஆர்சானிக் போன்ற அம்சங்கள் சேர்ந்து, குடிநீர் இல்லாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

அப்படியிருந்தும் மாநில அரசு, கழிவு நீரை மூன்று கட்டங்களில் சுத்திகரிக்காமல், ஏரிகளில் பாய்ச்சுவதால் இதுபோன்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதை தீவிரமாக கருதி, அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

பெங்களூரின் கழிவு நீரை, கோலார், சிக்கபல்லாபூர், பெங்களூரு ரூரல் மாவட்டங்களின் ஏரிகளுக்கு பாய்ச்சுவதற்கு முன், கட்டாயமாக மூன்று கட்டங்களில் சுத்திகரித்த பின், பாய்ச்ச வேண்டும் என, அரசுக்கு நீங்கள் உத்தரவிட வேண்டும்.

இவவாறு மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

போராட்ட கமிட்டி தலைவர் ஆஞ்சனேய ரெட்டி கூறியதாவது:

கவர்னர், எங்கள் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார். மூன்று மாவட்டங்களின் மக்களை பற்றி கவலை தெரிவித்தார். குடிநீர் விஷயத்தில் பொதுமக்கள் எதிர் கொண்டுள்ள பிரச்னைகளை கவனித்து, அரசுக்கு உத்தரவிடுவதாக கூறினார்.

விஷ ராமையா


பெங்களூரு குடிநீர் வாரியம், நிலத்தடி நீரை அசுத்தமாக்கி, மக்களின் ஆரோக்கியத்தை பாதிக்க செய்கிறது.

கோலார், சிக்கப்பல்லாபூர் மாவட்ட விவசாயிகள், முதல்வர் சித்தராமையாவை, 'விஷ ராமையா' என, அழைக்கும் வாய்ப்புள்ளது.

பெங்களூரில் உற்பத்தியாகும் கழிவு நீரை சுத்திகரித்து, கே.சி.வேலி, எச்.என்.வேலி திட்டத்தின் மூலம், மூன்று மாவட்டங்களின் பல ஏரிகளுக்கு பாய்ச்சப்படுகிறது.

இதனால் நிலத்தடி நீர்மட்டம் ஓரளவு அதிகரித்துள்ளது என்றாலும், நீரை முழுதுமாக சுத்திகரிக்காமல், தண்ணீரை பாய்ச்சுவதால் புதிய பிரச்னைகள் உருவாகின்றன.

தண்ணீர் பாய்ச்சப்படும் ஏரிகளின் தண்ணீரை, கால்நடைகள் குடிப்பது இல்லை. மக்களாலும் குடிக்க பயன்படுத்த முடிவது இல்லை. விவசாயத்துக்கும் தகுதியானதாக இல்லை.

எனவே, மூன்று கட்டங்களில் தண்ணீரை சுத்திகரித்து, ஏரிகளில் பாய்ச்ச வேண்டும். மூன்றாவது கட்டத்தில் நீரை சுத்திகரிக்க தேவையான உபகரணங்கள் வாங்குவது உட்பட, மற்ற பணிகளுக்கு வரும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us