Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/இந்தியாவில் தீவிர வறுமை குறைந்தது: உலக வங்கி அறிக்கை

இந்தியாவில் தீவிர வறுமை குறைந்தது: உலக வங்கி அறிக்கை

இந்தியாவில் தீவிர வறுமை குறைந்தது: உலக வங்கி அறிக்கை

இந்தியாவில் தீவிர வறுமை குறைந்தது: உலக வங்கி அறிக்கை

ADDED : ஜூன் 07, 2025 05:30 PM


Google News
Latest Tamil News
புதுடில்லி: பிரதமர் மோடி தலைமையிலான அரசின் தீவிர முயற்சி காரணமாக, இந்தியாவில் கடந்த 2011- 12 ல் 27.1 சதவீதமாக இருந்த தீவிர வறுமை விகிதம் 2022 - 23 ம் ல் 5.3 சதவீதமாக குறைந்து உள்ளது என உலக வங்கி தெரிவித்து உள்ளது.

அதன் அறிக்கையின்படி 2011 -12ல் 34.47 கோடி மக்கள் தீவிர வறுமையில் இருந்தனர். இந்த எண்ணிக்கை 2022 - 23 ம் நிதியாண்டில் 7.5 கோடியாக குறைந்தது. இதன் மூலம் கடந்த 11 ஆண்டில் மட்டும் 26.9 கோடி பேர் தீவிர வறுமையில் இருந்து அகற்றப்பட்டு உள்ளனர்.

2011 - 12 ல் உ.பி., மஹாராஷ்டிரா, பீஹார், மேற்கு வங்கம் மற்றும் ம.பி., மாநிலங்களில் 65 சதவீதம் பேர் தீவிர வறுமை நிலையில் இருந்தனர். தற்போது வறுமை நிலையில் இருந்து வந்தவர்களில் 3 ல் 2 பங்கு இந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us