நிர்வாக எல்லை முடக்கம் ஜூன் 30 வரை நீட்டிப்பு
நிர்வாக எல்லை முடக்கம் ஜூன் 30 வரை நீட்டிப்பு
நிர்வாக எல்லை முடக்கம் ஜூன் 30 வரை நீட்டிப்பு
ADDED : ஜன 31, 2024 01:30 AM
புதுடில்லி,:மாநில எல்லையை முடக்குவதற்கான கடைசி தேதியை ஜூன் 30 வரை நீட்டிக்க டில்லி துணை நிலை கவர்னர் சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளார்.
புதுடில்லியில் 'மக்கள் தொகை கணக்கெடுப்பு -2021' பணிக்காக மாவட்டங்கள், தாலுகாக்கள், நகரங்களின் நிர்வாக எல்லை 2019ம் ஆண்டு டிசம்பர் 31ல் முடக்கப்பட்டது.
ஆனால், கொரோனா தொற்று பரவல் காரணமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியும் முடங்கியது.
இதைத் தொடர்ந்து, நிர்வாக எல்லை முடக்கப்படும் தேதி இந்தாண்டு ஜனவரி 1ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
இருப்பினும், கணக்கெடுப்பு பணியில் ஏற்பட்டுள்ள தொய்வு காரணமாக மேலும் நீட்டிக்கக் கோரி, டில்லி வருவாய் துறை, துணை நிலை கவர்னருக்கு பரிந்துரை செய்தது.
அதை ஏற்றுக் கொண்ட கவர்னர் சக்சேனா, ஜூன் 30ம் தேதியை நிர்வாக எல்லையை முடக்கி வைக்க கையெழுத்திட்டார்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு விதிமுறைகள், 1990 விதி 8 (4)ன் படி, மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மக்கள் தொகை கணக்கெடுப்பு காலத்தில் மாவட்டங்கள், தாலுகாக்கள், நகரங்களின் நிர்வாக எல்லைகளை மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையரால் அறிவிக்கப்படும் தேதியிலிருந்து முடக்கும்.