Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/'கொரோனா குறைந்தாலும் முன்னெச்சரிக்கை அவசியம்'

'கொரோனா குறைந்தாலும் முன்னெச்சரிக்கை அவசியம்'

'கொரோனா குறைந்தாலும் முன்னெச்சரிக்கை அவசியம்'

'கொரோனா குறைந்தாலும் முன்னெச்சரிக்கை அவசியம்'

ADDED : ஜன 19, 2024 12:30 AM


Google News
பெங்களூரு : 'கர்நாடகாவில் கொரோனா தொற்று இறங்குமுகமாக இருந்தாலும், முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்' என, சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து, சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை:

மாநிலத்தில் உருமாறிய கொரோனா தொற்று, நாளுக்கு நாள் குறைகிறது. ஆனால், பொது மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். முக கவசம் அணிவது, கிருமி நாசினி பயன்படுத்துவது, சமூக விலகலை பின்பற்றுவது நல்லது என, ஆலோசனை கமிட்டி, சிபாரிசு செய்துள்ளது.

நோயால் அவதிப்படுவோர், கர்ப்பிணியர், குழந்தை பெற்ற தாய்மார்கள், 60 வயதுக்கு மேற்பட்டோர், இதய, நுரையீரல் பிரச்னை உள்ளவர்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

மூச்சு திணறல், சளி, காய்ச்சல் உள்ளவர்கள், அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு சென்று, மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us