21 வது மாடியில் இருந்து குதித்து இன்ஜி., தற்கொலை
21 வது மாடியில் இருந்து குதித்து இன்ஜி., தற்கொலை
21 வது மாடியில் இருந்து குதித்து இன்ஜி., தற்கொலை
ADDED : ஜன 03, 2024 07:47 AM
பெல்லந்துார்: அடுக்குமாடி குடியிருப்பின் 21வது மாடியில் இருந்து குதித்து, இன்ஜினியர் தற்கொலை செய்து கொண்டார்.
தார்வாட்டை சேர்ந்தவர் சாரங் குல்கர்னி, 27. சாப்ட்வேர் இன்ஜினியர். ஐ.டி., நிறுவனத்தில் வேலை செய்தார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, பணியை ராஜினாமா செய்தார்.
இவரது பெற்றோர் ஜெ.பி.நகரில் வசிக்கின்றனர். ஆனால் அவர்களுடன் இருக்காமல், சர்ஜாபூர் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், தனியாக வசித்தார்.
இந்நிலையில் நேற்று காலை 8:00 மணியளவில், அடுக்குமாடி குடியிருப்பின் 21வது மாடியில் இருந்து குதித்தார். படுகாயம் அடைந்தவர் பரிதாபமாக இறந்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில், 'நான் நினைத்ததை சாதிக்க முடியவில்லை' என்று, பெற்றோரிடம் சாரங் அடிக்கடி கூறி வந்ததும், மன உளைச்சலில் இருந்ததும் தெரிந்தது.