Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ வரும் 21ல் சர்வதேச யோகா தினம் ஹரியானாவில் விரிவான ஏற்பாடுகள்

வரும் 21ல் சர்வதேச யோகா தினம் ஹரியானாவில் விரிவான ஏற்பாடுகள்

வரும் 21ல் சர்வதேச யோகா தினம் ஹரியானாவில் விரிவான ஏற்பாடுகள்

வரும் 21ல் சர்வதேச யோகா தினம் ஹரியானாவில் விரிவான ஏற்பாடுகள்

ADDED : ஜூன் 13, 2025 08:58 PM


Google News
சண்டிகர்:வரும், 21ம் தேதி சர்வதேச யோகா நாளை முன்னிட்டு, ஹரியானா மாநிலத்தின், 22 மாவட்டங்களிலும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஒவ்வொரு ஆண்டும், ஜூன் 21ம் தேதி, சர்வதேச யோகா நாள், உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஹரியானா மாநிலத்தின் குருஷேத்ரா நகரில் உள்ள பிரம்ம சரோவர் என்ற ஏரிக்கரையில், பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதுகுறித்து, பா.ஜ.,வைச் சேர்ந்த, மாநில முதல்வர் நயப் சிங் சைனி கூறியதாவது:

வரும் 21ம் தேதி, சர்வதேச யோகா நாளை முன்னிட்டு, ஹரியானாவின் 22 மாவட்டங்கள் மற்றம் 121 வட்டாரங்களில் விரிவான பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குருஷேத்ராவில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சிக்கு, யோகா குரு ராம்தேவ் தலைமை வகிக்கிறார்.

இந்த நிகழ்ச்சிக்கு மத்திய அரசின் ஆயுஷ் துறை, ஹரியானா யோகா அமைப்பு மற்றும் இந்தோ - திபெத் எல்லை போலீஸ் போன்ற அமைப்புகள் ஏற்பாடு செய்துள்ளன. நிகழ்ச்சியில் மாநில முதல்வர் பங்கேற்பார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க, 15.60 லட்சம் பேர் தங்கள் பெயரை பதிவு செய்துள்ளனர்.

யோகா செய்வதால், மனிதர்களின் ஆரோக்கியம் மேம்படுகிறது. அதே நேரத்தில் ஒழுக்கம் மேம்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us