Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ புதிய 27 கழிவு நீர் சுத்திகரிப்பு மையங்கள் இந்த ஆண்டின் மத்தியில் அமைகின்றன

புதிய 27 கழிவு நீர் சுத்திகரிப்பு மையங்கள் இந்த ஆண்டின் மத்தியில் அமைகின்றன

புதிய 27 கழிவு நீர் சுத்திகரிப்பு மையங்கள் இந்த ஆண்டின் மத்தியில் அமைகின்றன

புதிய 27 கழிவு நீர் சுத்திகரிப்பு மையங்கள் இந்த ஆண்டின் மத்தியில் அமைகின்றன

ADDED : ஜூன் 13, 2025 09:00 PM


Google News
புதுடில்லி:புதிதாக, 27 இடங்களில், பொது கழிவு நீர் சுத்திகரிப்பு மையங்களை, இந்த ஆண்டின் மத்திக்குள் துவக்க, டில்லி அரசு முடிவு செய்துள்ளது.

டில்லியில் பாயும் யமுனை நதி, மிகவும் மாசடைந்துள்ளது. அந்த நதியை சுத்திகரிக்க, மாநில அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அந்த வகையில், இப்போது, புதிதாக, 27 தொழில் வளாகங்களில், கழிவுநீரை சுத்திகரிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.

அந்த தொழில் வளாகங்களில் இருந்து கிடைக்கும் கழிவு நீரை, சுத்திகரித்து, யமுனை நதியில் விட திட்டம் திட்டப்பட்டுள்ளது.

டில்லியில் தற்போது, 13 பொது கழிவு நீர் சுத்திகரிப்பு மையங்கள் உள்ளன. அவற்றின் வாயிலாக, ஒரு நாளைக்கு, 200 மில்லியன் லிட்டர் கழிவு நீர் சுத்திகரிக்கப்படுகின்றன. இப்போது புதிதாக, 27 சுத்திகரிப்பு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. அதன் பிறகு, யமுனை நதி சுத்தமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டில்லி மாசு கட்டுப்பாட்டு கமிட்டி, அவ்வப்போது கூடி, கழிவு நீரை சுத்திகரிக்க கூறி வருகிறது. எனினும், பல சிறிய தொழிற்சாலைகளில் வெளியாகும் கழிவு நீர், அப்படியே யமுனை நதியில் வெளியேற்றப்படுகிறது.

இந்த சிக்கலுக்கு தீர்வு காண, பொது கழிவு நீர் சுத்திகரிப்பு மையங்களை, 27 இடங்களில் துவக்க, டில்லி மாநில அரசு முடிவு செய்துள்ளது. இந்த ஆண்டு, மத்தியில் இந்த திட்டம் நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வருண் குலாதி என்ற நீர் ஆர்வலர் கூறியதாவது:

டில்லியில் இப்போது பயன்பாட்டில் உள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு மையங்கள், 20 ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்டவை. அவை, தற்போதைய கழிவு நீர் சுத்திகரிப்பு அம்சங்களை கொண்டிருக்கவில்லை. மேலும் அவற்றில் பல, தனியார் சங்கங்களால் நிர்வகிக்கப்படுகின்றன.

அவற்றிற்கு மாற்றாக, புதிய கழிவு நீர் சுத்திகரிப்பு மையங்களை துவக்க வேண்டும் என 2012ல் முடிவு செய்யப்பட்டது. அதுவும், 13 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு, இப்போது தான் புதிய அறிவிப்பு வந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us