ரூ.8,000 மதிப்பு பீர் பாட்டில்களுடன் ஒயின் ஷாப்பில் இருந்து காரில் ஓட்டம்
ரூ.8,000 மதிப்பு பீர் பாட்டில்களுடன் ஒயின் ஷாப்பில் இருந்து காரில் ஓட்டம்
ரூ.8,000 மதிப்பு பீர் பாட்டில்களுடன் ஒயின் ஷாப்பில் இருந்து காரில் ஓட்டம்
ADDED : ஜன 01, 2024 06:40 AM
குடகு: சுற்றுலா பயணி ஒருவர், ஒயின் ஷாப்பில் 8,000 ரூபாய் மதிப்புள்ள, பீர் பாட்டில்களுடன் காரில் தப்பியோடினார்.
ஆங்கில புத்தாண்டை கொண்டாட உள்நாடு, வெளி நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் குடகு மாவட்டத்துக்கு வந்துள்ளனர். சொகுசு விடுதிகள், ஹோம் ஸ்டேக்கள், ஹோட்டல்களில் தங்கி உள்ளனர்.
குடகு, குஷால் நகரில் 'நேஷனல் ஒயின்ஸ்' என்ற மதுபானக்கடை உள்ளது. நேற்று காலை சுற்றுலா பயணி ஒருவர், மதுபானம் வாங்க இந்த ஒயின்ஸ் ஷாப்புக்கு வந்தார். 8,000 ரூபாய் மதிப்புள்ள பீர் பாட்டில்களை வாங்கி, அட்டை பெட்டியில் பேக்கிங் செய்து, காரில் வைத்துக் கொண்டார்.
அதன்பின் ஆன்லைன் வழியாக, பணம் செலுத்த 'கியுஆர் கோடு' ஸ்கேன் செய்வது போன்று நாடகமாடி, பணம் செலுத்தாமல் காரை ஓட்டிக்கொண்டு தப்பியோடினார். இந்த காட்சி, கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
இது குறித்து, ஒயின்ஷாப் உரிமையாளர், குஷால் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். போலீசாரும் விசாரிக்கின்றனர்.