இறந்த சிசுவை கவ்வி சென்ற நாய் அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி
இறந்த சிசுவை கவ்வி சென்ற நாய் அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி
இறந்த சிசுவை கவ்வி சென்ற நாய் அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி
ADDED : ஜூன் 08, 2025 01:00 AM
போபால்: மத்திய பிரதேசத்தின் இந்துாரில் உள்ள மோவ் பகுதியில் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்குள்ள கழிப்பறை அருகே நாய் ஒன்று, பிறந்து இறந்த சிசுவை வாயில் கவ்விச் சென்றதை மருத்துவமனை காவலாளி நேற்று கண்டார்.
நாயை விரட்டிய அவர், சிசுவின் உடலை செவிலியர்களிடம் ஒப்படைத்தார்.
இது தொடர்பாக, மோவ் போலீசில் புகாரளிக்கப்பட்டது. இதையடுத்து, மருத்துவமனை வந்த போலீசார், அங்குள்ள 'சிசிடிவி' காட்சிகளை ஆய்வு செய்தனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில், 'சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், கழிப்பறையில் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
'மர்ம நபர் ஒருவருடன் மருத்துவமனையில் இருந்து வெளியேறிய சிறிது நேரத்தில், கழிப்பறைக்கு சென்ற நாய், பிறந்து இறந்த நிலையில் இருந்த சிசுவின் உடலை கவ்விச் சென்றது.
'காவலாளி அதை மீட்டுள்ளார். இந்த விபரங்கள் விசாரணையில் தெரியவந்ததை அடுத்து, தப்பிச் சென்ற சிறுமி மற்றும் அவருடன் வந்த நபரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது' என, தெரிவித்தனர்.