லோக்சபா தேர்தல் முடியும் வரை ஓய்வு கூடாது! தொண்டர்களுக்கு பா.ஜ., தலைவர் விஜயேந்திரா கட்டளை
லோக்சபா தேர்தல் முடியும் வரை ஓய்வு கூடாது! தொண்டர்களுக்கு பா.ஜ., தலைவர் விஜயேந்திரா கட்டளை
லோக்சபா தேர்தல் முடியும் வரை ஓய்வு கூடாது! தொண்டர்களுக்கு பா.ஜ., தலைவர் விஜயேந்திரா கட்டளை
ADDED : ஜன 27, 2024 11:17 PM

பெங்களூரு: ''நமது ஒரு குறிக்கோள் லோக்சபா தேர்தல் வெற்றி. தேர்தல் முடியும் வரை நாம் ஓய்வு கூடாது. வீட்டில் அமர்ந்திருக்க கூடாது,'' என, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா தெரிவித்தார்.
பெங்களூரின், அரண்மனை மைதானத்தில் விஜயேந்திரா தலைமையில், கர்நாடக பா.ஜ., சிறப்பு செயற் குழு கூட்டம் நேற்று நடந்தது. நிகழ்ச்சியை துவக்கிவைத்து, அவர் பேசியதாவது:
நம் எதிராளிகளை குறைத்து மதிப்பிட கூடாது. நமது சாதனைகளை மக்களின் முன் வைத்து, கட்சியின் வெற்றிக்காக இரவு, பகலாக உழைக்க வேண்டும். பல நுாற்றாண்டு தவத்தின் பலனாக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், அயோத்தியில் ராமர் கோவிலில் பிராண பிரதிஷ்டை நடந்தது. நிரந்தரமான போராட்டத்தின் பலனாக, ராமர் கோவில் திறக்கப்பட்டது. இந்த சுப நாளில், நாம் ஒன்றாக கூடியுள்ளோம்.
லோக்சபா தேர்தல் நெருங்குகிறது. நாம் ஒரு நாளும் ஓய்வெடுக்க கூடாது. வீட்டில் ஓய்வில் அமரும் சூழ்நிலை நமக்கு வரக்கூடாது. பிரதமர் மோடி, நாட்டின் அனைத்து தொகுதிகளையும் மேம்படுத்தியுள்ளார். நாட்டை முன்னேற்ற பாதையில், அழைத்து செல்கிறார்.
பா.ஜ., தொண்டர்களுக்கான கட்சி. ஜம்மு - காஷ்மீர், பல ஆண்டுகளாக பயங்கரவாதிகளின் தொல்லையால் தத்தளித்தது. அம்மாநிலத்தில் விதி 370ஐ ரத்து செய்தால், கலவரம் வெடிக்கும் என்ற தோற்றத்தை காங்கிரஸ் ஏற்படுத்தியது. பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் திடமான முடிவால், அந்த சட்டம் ரத்தானது.
ஜம்மு - காஷ்மீரில் இருந்த பயங்கரவாதிகளுக்கு, பண உதவி செய்த தீய சக்திகள் வேருடன் பிடுங்கி எறியப்பட்டது.
அயோத்தி ராமர் கோவில் திறக்கப்பட்டதால், நாம் மகிழ்ச்சியாக இருந்த அதே நேரத்தில், மாநிலத்தில் காங்கிரஸ் அரசு, ஹூப்பள்ளியின், ஸ்ரீகாந்த் பூஜாரியை கைது செய்தது.
அரசு அமைந்து எட்டு மாதங்களாகியும், சட்டம் - ஒழுங்கு சீர் குலைந்துள்ளது. வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் உதவிக்கு, காங்கிரஸ் அரசு செல்லவில்லை. விவசாயிகள் பாதிப்படைந்தும் கூட, அரசு விழிக்கவில்லை.
இவ்வாறு அவர்பேசினார்.