இரு எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் : ஜார்க்கண்ட் சபாநயகர் அதிரடி
இரு எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் : ஜார்க்கண்ட் சபாநயகர் அதிரடி
இரு எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் : ஜார்க்கண்ட் சபாநயகர் அதிரடி
ADDED : ஜூலை 25, 2024 08:02 PM

ராஞ்சி: ஜார்க்கண்டில் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் இரு எம்.எல்.ஏ.க்கள் தகுதி செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்வராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் ஹேமந்த் சோரன் உள்ளார். இம்மாநில சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர் நாளை துவங்கி ஆறு நாட்கள் நடக்கிறது.
இந்நிலையில்ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியைச் சேர்ந்த ராஜ்மஹால் தொகுதி லோபின் ஹெம்புரோம், ஹாசாரிபாக் தொகுதி பா.ஜ., எம்.எல்.ஏ.வாக இருந்து பின் காங்கிரஸ் கட்சிக்கு தாவிய ஜெய்பிரகாஷ் பாய் படேல் ஆகிய இரு எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்ய கட்சி மேலிடம் பரிந்துரை செய்தது.
இததையடுத்து இரு எம்.எல்.ஏ.க்கள் மீதும் கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் ரபீந்திரநாத் மஹாட்டோ உத்தரவிட்டார்.
இந்த உத்தரவு உடனடியாக அமல்படுத்தப்பட்டதால், நாளை நடைபெற உள்ள சட்டசபை கூட்டத்தொடரில் அவர்கள் இருவரும் பங்கேற்க அனுமதி இல்லை என கூறப்படுகிறது.