சந்திரபாபு முன்ஜாமினுக்கு எதிரான மனு தள்ளுபடி
சந்திரபாபு முன்ஜாமினுக்கு எதிரான மனு தள்ளுபடி
சந்திரபாபு முன்ஜாமினுக்கு எதிரான மனு தள்ளுபடி
ADDED : ஜன 29, 2024 11:32 PM

புதுடில்லி: அமராவதி சாலை ஊழல் வழக்கில், தெலுங்கு தேச கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு வழங்கப்பட்ட முன்ஜாமினை எதிர்த்து ஆந்திர அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.
ஆந்திராவின் முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவி வகித்த காலத்தில், பல நிறுவனங்களுக்கு உதவும் வகையில், தலைநகர் அமராவதி மாஸ்டர் பிளான், உள்வட்ட சுற்றுச் சாலை உள்ளிட்ட திட்டங்களில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து ஆந்திர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் முன்ஜாமின் கேட்டு சந்திரபாபு நாயுடு தரப்பு தாக்கல் செய்த மனுவை விசாரித்த ஆந்திர உயர் நீதிமன்றம் அவருக்கு முன்ஜாமின் வழங்கியது.
இதை எதிர்த்து, ஆந்திர அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு:
இந்த வழக்கு குறித்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு ஏற்கனவே நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. எனவே முந்தைய உத்தரவை கருத்தில் வைத்து, மாநில அரசின் மேல்முறையீட்டு மனுவை ஏற்க உச்ச நீதிமன்றம் விரும்பவில்லை. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.