சபரிமலையில் மீண்டும் நீண்ட நேரம் காத்திருக்கும் பக்தர்கள்; தரிசனம் செய்யாமல் திரும்பும் நிலை
சபரிமலையில் மீண்டும் நீண்ட நேரம் காத்திருக்கும் பக்தர்கள்; தரிசனம் செய்யாமல் திரும்பும் நிலை
சபரிமலையில் மீண்டும் நீண்ட நேரம் காத்திருக்கும் பக்தர்கள்; தரிசனம் செய்யாமல் திரும்பும் நிலை

கதறும் பக்தர்கள்
மகர விளக்கு சீசன் டிச. 30 -ல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மண்டல காலம் போலவே இப்போதும் பக்தர்கள்கூட்டம் அலைமோதுகிறது. ஒரு நாளில் எத்தனை பக்தர்களை அனுமதிக்க முடியும் என்ற கணக்கில்லாத தேவசம்போர்டு தினமும் ஒரு லட்சம் பேர் தரிசனம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறது. ஆனால் பம்பையில் இருந்து சன்னிதானம் பெரிய நடை பந்தல் வருவதற்கு பக்தர்கள் 14 முதல் 16 மணி நேரம் கியூவில் நிற்கின்றனர்.
நெரிசலுக்கு காரணம்
நீண்ட நேர காத்திருப்புக்கு பின்னர் 18 படி ஏறி தரிசனத்திற்கு சென்ற தஞ்சாவூர் பக்தர் தயானந்த் 24, என்பவரை போலீசார் தாக்கிய சம்பவம் விவாதத்தை கிளப்பியுள்ளது. இவர் சன்னிதானம் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நீண்ட காத்திருப்பு, துாக்கமின்மை காரணமாக தரிசனம் முடிந்த பக்தர்கள் உடனடியாக பம்பை திரும்புவதற்கு பதிலாக சன்னிதானத்திலேயே ஆங்காங்கே துாங்குவதால் கூட்ட நெரிசல் காணப்படுகிறது.