பப்ளிக் பள்ளி விவகாரம் 50 சதவீத கல்விக் கட்டணம் செலுத்த ஐகோர்ட் உத்தரவு
பப்ளிக் பள்ளி விவகாரம் 50 சதவீத கல்விக் கட்டணம் செலுத்த ஐகோர்ட் உத்தரவு
பப்ளிக் பள்ளி விவகாரம் 50 சதவீத கல்விக் கட்டணம் செலுத்த ஐகோர்ட் உத்தரவு
ADDED : ஜூலை 13, 2024 08:26 PM
புதுடில்லி:உயர்த்தப்பட்ட கல்விக் கட்டணம் செலுத்தாததால், தனியார் பள்ளியில் இருந்து நீக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர், 50 சதவீத கட்டணத்தை செலுத்துமாறு டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
துவாரகாவில் உள்ள டில்லி பப்ளிக் பள்ளியில் இந்த ஆண்டு திடீரென கல்விக் கட்டணம் அதிகரிக்கப்பட்டது. உயர்த்தப்பட்ட கட்டணத்தை செலுத்தாத மாணவர்கள் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டனர்.
கல்வி இயக்குனரக அனுமதியின்றி கல்விக் கட்டணம் உயர்த்தப்பட்டதாக குற்றஞ்சாட்டிய பெற்றோர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்வரணா காந்த ஷர்மா, உயர்த்தப்பட்ட கல்விக் கட்டணத்தில் 50 சதவீதத்தை பெற்றோர் உடனே செலுத்த உத்தரவிட்டார்.
மேலும், கல்வித் துறை இயக்குனர் மற்றும் டில்லி பப்ளிக் பள்ளி நிர்வாகி ஆகியோர் இரண்டு வாரங்களுக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் 30ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
உயர்த்தப்பட்ட கட்டணத்தை செலுத்தவில்லை என குற்றம்சாட்டி 20க்கும் மேற்பட்ட மாணவர்களை டில்லி பப்ளிக் பள்ளி நிர்வாகம் சமீபத்தில் நீக்கியது.