பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் டில்லி அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் டில்லி அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் டில்லி அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
ADDED : பிப் 25, 2024 02:42 AM
புதுடில்லி,:தலைநகர் டில்லியில் பள்ளிகளுக்கு அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் வருகின்றன. இவற்றைத் தடுக்க எடுக்கப்பட்டுள்ள செயல் திட்டம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய, டில்லி அரசு மற்றும் டில்லி மாநகரப் போலீசுக்கு டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டில்லியை சேர்ந்த வழக்கறிஞர் அர்பித் பார்கவா, டில்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனு:
டில்லியில் கடந்த ஆண்டு ஐந்து பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தன. அதில், மூன்று மிரட்டல் குறித்து இன்னும் விசாரணையை போலீஸ் முடிக்கவில்லை.
இதுபோன்று பள்ளிகளுக்கு மிரட்டல் வருவதைத் தடுக்க, டில்லி அரசு மற்றும் டில்லி மாநகரப் போலீஸ் ஆகியவை சிறப்பு செயல் திட்டத்தை உருவாக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுப்ரமணியம் பிரசாத், ''டில்லி அரசு மற்றும் டில்லி மாநகர போலீஸ் ஆகியவை, மனுதாரரின் கோரிக்கைக்கு விரிவான பதிலை தாக்கல் செய்ய வேண்டும்.
''மேலும், இந்த விவகாரத்தில் அரசு மற்றும் போலீஸ் ஆகியவை எடுத்துள்ள செயல் திட்டம் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்,'' என, உத்தரவிட்டார்.
இந்த மனு மீதான விசாரணை ஏப்ரல் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.