காருக்கு வழிவிட மறுப்பு: பெண்ணை தாக்கிய தம்பதி கைது
காருக்கு வழிவிட மறுப்பு: பெண்ணை தாக்கிய தம்பதி கைது
காருக்கு வழிவிட மறுப்பு: பெண்ணை தாக்கிய தம்பதி கைது
UPDATED : ஜூலை 21, 2024 12:09 PM
ADDED : ஜூலை 21, 2024 11:36 AM

புனே:மஹாராஷ்டிராவில் சாலையில், தனது காருக்கு வழி விடாததற்காக டூவிலரில் குழந்தைகளுடன் சென்ற பெண்ணை கொடூரமாக தாக்கிய முதியவரை போலீசார் கைது செய்தனர்.
மஹாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள பாஷன் -பனீர் சாலையில் ஜெர்லின் டி சில்வா என்ற பெண், குழந்தைகளுடன் டூவிலரில் சென்று கொண்டிருந்தார். அந்த வழியில், ஸ்வப்னில் கேக்ரே என்பவர், மனைவியுடன் காரில் வந்து கொண்டிருந்தார். காருக்கு வழிவிடுவதற்காக ஜெர்லின் இடதுபுறம் சென்றார். ஆனால், அவரை முந்தி சென்ற ஸ்வப்னில் கேக்ரே, டூவிலர் குறுக்கே காரை நிறுத்தினார்.
வெளியே வந்த அவர், காருக்கு வழி விடாதது ஏன் என கேட்டு ஜெர்லின் முடியை பிடித்து இழுத்ததுடன் முகத்தில் பல முறை குத்தினார். அதில், அவரது மூக்கு உடைந்து ரத்தம் ஒழுகியது. இதனை பார்த்த குழந்தைகள் அச்சமடைந்தனர். தனக்கு ஏற்பட்ட துயரத்தை ஜெர்லின் டி சில்வா சமூக வலைதளத்தில் வெளியிட்டதுடன் போலீசிலும் புகார் செய்தார். இதனையடுத்து ஸ்வப்னில் கேக்ரேவையும், அவரது மனைவியையும் போலீசார் கைது செய்தனர்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் 17 வயதான சிறுவன் போதையில் ஓட்டிச் சென்ற கார், மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். தற்போது அந்த நபர் ஜாமினில் உள்ளார். கடந்த மாதம், அரசியல்வாதி ஒருவரின் மகன் சென்ற கார் மோதியதில் 2 பேர் படுகாயமடைந்தனர். அவரை போலீசார் கைது செய்தனர். புனே நகர சாலைகளில் அடுத்தடுத்து இதுபோன்ற நிகழ்வுகள் நடப்பதால், அந்நகரம் பொது மக்கள் பயணிப்பதற்கு பாதுகாப்பு இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.