Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/சட்டசபை கூட்டத்துக்கு கவர்னருக்கு அழைப்பு சம்பிரதாயத்தை காங்., அரசு மீறியதாக சர்ச்சை

சட்டசபை கூட்டத்துக்கு கவர்னருக்கு அழைப்பு சம்பிரதாயத்தை காங்., அரசு மீறியதாக சர்ச்சை

சட்டசபை கூட்டத்துக்கு கவர்னருக்கு அழைப்பு சம்பிரதாயத்தை காங்., அரசு மீறியதாக சர்ச்சை

சட்டசபை கூட்டத்துக்கு கவர்னருக்கு அழைப்பு சம்பிரதாயத்தை காங்., அரசு மீறியதாக சர்ச்சை

ADDED : பிப் 12, 2024 06:28 AM


Google News
பெங்களூரு: இன்று துவங்கும் கர்நாடக சட்டசபை, மேலவை கூட்டத்துக்கு கவர்னருக்கு அழைப்பு விடுப்பதில், ஒழுங்கு, சம்பிரதாயம் பின்பற்றவில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பொதுவாக ஆண்டின் முதல் சட்டசபை, மேலவை கூட்டத்தை, கவர்னர் உரையாற்றி துவக்கி வைப்பது வழக்கம். இதற்காக சபாநாயகர், சட்ட மேலவை தலைவர் என, இருவரும் சேர்ந்து சென்று, கவர்னரை சந்தித்து அழைப்பு விடுப்பது சம்பிரதாயம். இந்த சம்பிரதாயம் மீறப்பட்டுள்ளது.

முதன் முதலில் பிப்ரவரி 2ம் தேதி, கவர்னர் தாவர்சந்தை, சபாநாயகர் காதர், சட்டசபை செயலர் விசாலாட்சி சந்தித்து அழைப்பு விடுத்தனர்.

இதை தொடர்ந்து பிப்ரவரி 10ம் தேதி, மாலை 4:00 மணிக்கு கவர்னரை சந்திப்பதாக, சட்ட மேலவை தலைவர் பசவராஜ் ஹொரட்டி, சபாநாயகர் காதரிடம் கூறி, ராஜ்பவனுக்கு சேர்ந்து செல்லலாம் என்றார். ஆனால் வேறொரு பணி நிமித்தமாக, மங்களூருக்கு செல்ல வேண்டும் என, கூறி அவர் சென்று விட்டார்.

எனவே மேலவை தலைவர் மட்டும், நேற்று முன்தினம் மாலை ராஜ்பவனுக்கு சென்று, சட்டசபை, மேலவை கூட்டத்துக்கு வரும்படி அழைப்பு விடுத்தார்.

காதர், மங்களூருக்கு செல்வதற்கு முன், கவர்னரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி, தவிர்க்க முடியாத காரணத்தால், தன்னால் வர முடியவில்லை என, கூறியுள்ளார்.

இந்த விஷயத்தை, மேலவை தலைவரிடம் காதர் தெரிவிக்கவில்லை என, கூறப்படுகிறது.

ஆண்டின் முதல் கூட்டம் துவங்குவதற்கு முன், சபாநாயகரும், மேலவை தலைவரும் இணைந்து ஊடகத்தினர் சந்திப்பு நடத்தி, கூட்டம் தொடர்பான விபரங்களை கூறுவது வழக்கம். ஆனால் இம்முறை அதுவும் நடக்கவில்லை;

காதர் மட்டுமே தனியாக ஊடகத்தினர் சந்திப்பு நடத்தினார். இது பற்றி பசவராஜ் ஹொரட்டிக்கு தகவலும் கூறவில்லையாம்.

சபாநாயகர் காதரின் செயல், இயல்பாக நடந்ததா. கட்சி அல்லது அரசு காரணமா என, பா.ஜ., கேள்வி எழுப்பியுள்ளது. சபாநாயகர் காங்கிரசையும், மேலவை தலைவர் பா.ஜ.,வையும் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us