தேர்வு கண்காணிப்பு பணியில் இருந்து ஆசிரியர்களை நீக்கியதால் வாக்குவாதம்
தேர்வு கண்காணிப்பு பணியில் இருந்து ஆசிரியர்களை நீக்கியதால் வாக்குவாதம்
தேர்வு கண்காணிப்பு பணியில் இருந்து ஆசிரியர்களை நீக்கியதால் வாக்குவாதம்
ADDED : பிப் 24, 2024 05:00 AM

பெங்களூரு : எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு கண்காணிப்புப் பணியில் இருந்து, உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களை நீக்கியதால், கர்நாடகா சட்டமேலவையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
பா.ஜ., உறுப்பினர்கள் மரிதிப்பேகவுடா, நாராயணசாமி சங்கனுார்: எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு கண்காணிப்புப் பணியில் இருந்து, உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் திடீரென நீக்கப்பட்டு உள்ளனர். இது ஆசிரியர்களை அவமானப்படுத்துவது போன்றது. ஆசிரியர்கள் மீது இந்த அரசுக்கு சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.
பள்ளிகல்வி அமைச்சர் மதுபங்காரப்பா: அனைத்து அதிகாரிகளுடன் ஆலோசித்து, இந்த முடிவை எடுத்துள்ளோம்.
மரிதிப்பேகவுடா: ஆசிரியர்களை அவமதிக்கும் எண்ணம் இல்லை என்று கூறிவிட்டு, அவர்களை சந்தேகத்துடன் பார்த்தால் எப்படி? யாருடைய அறிவுரையின்பேரில் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வை மூன்றாக பிரித்து நடத்துகிறீர்கள். ஆசிரியர்களை அவமதிப்பது சமூகத்தை அவமதிக்கும் செயல்.
இதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
மேலவைத் தலைவர் இருக்கை முன், போராட்டம் நடத்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வந்தனர். அவர்களை தலைவர் இருக்கையில் அமர்ந்திருந்த துணை தலைவர் பிரானேஷ் எச்சரித்தார். அதன்பின்னர் சபை தொடர்ந்து நடந்தது.